பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63' நவராத்திரி விழா என அழைக்கப்பட்டது விழா வின் பொழுது இராமநாதபுரம் அரசர் தமது இராமலிங்க விலாசம் அரண்மனையில் கொலுவீற்று இருப்பார். இது கோவில் விழாவாக இருந்தாலும், ஒரு தமிழ் விழா வாகவே ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது. அப் பொழுது தமிழகம் முழுவதிலுமிருந்து புலவர் பெருமக்கள் அரசவையில் வந்து கூடுவர். தங்களது ஆழ்ந்த புலமை யையும் சேதுபதி வழியினரது சிறப்பு இயல்புகளை யும் அருங்கவிதைகளாக அமைத்து அரங்கேற்றுவர். இந்த நிகழ்ச்சி, திருமலை ரகுநாத சேதுபதி ஆட்சிச் காலம் முதல் அண்மைக்காலம் வரை நடந்த கலைவிழா வாகும். பாஸ்கர சேதுபதி மன்னரது ஆட்சிக் காலத்தி அலும் இந்த நிகழ்ச்சி, சிறப்பாக நடைபெற்றது. சேதுபதி மன்னரது கொடையினைப் பெற்றுத் தங்களது திறமைக்கு அரச முத்திரை” பெறுவதற்கென்றே நாம் றுக்கன்கில் புலவர்கள் இந்த விழிாவிற்குவருகைதருவது வழக்கம். அவர்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பரிசில் களை அளித்துப் பெருமைப்படுத்தி அனுப்புவது மன்ன ரது பழக்கம். ஒருமுறை பழனியில் இருந்த பெரும் புலவர் மாம் பழக் கவிசிங்க் பாஸ்கர் சேதுபதியின் அவிைக்கு வந்தா பிறவிக் குருடரான அந்தப் பெரியவரது புலமை மிகுந்த பேச்சு மன்னரை வியப்பில் ஆழ்த்தியது. அவரது ஆழ்ந்த கவிநயத்திற்கும், கற்பனை வளத்திற்கும், புறக் கண்கள் இல்லாத பெருங்குறை அவருக்கு அணு அளவும் இடையூறாக இல்லை. ஏடாயிரங்கோடி எழுதாது தம் மனத்தே எழுதிப்படித்த தமிழ் விரகராக அந்தப் புலவர் மன்னருக்கு காட்சி அளித்தார். மகிழ்ச்சி மீக்கூர அணி யும், மணியும், பொன்னும், பூவும், நிறைத்த பொன் தட்டினை புலவரிடம் நீட்டினார் மன்னர். அந்தகரான புலவர் தடுமாற்றத்துடன் அதனைப் பற்றிப் பிடித்துக் கொண்டு தட்டு இங்கேயா அல்லது அங்கேயா’’ என வினவினார். "தட்டு-(பற்றாக்குறை)-அங்கோன்' சிலேடையாகவும்,_சாமர்த்தியமாகவும், குறிப்பிட்ட மன்னரது பதில் புலவரை திகைக்க வைத்தது. கருங்