பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 இராமநாதபுரம் சமஸ்த்தான நிர்வாகம் ஆட்சிக்குழு விடம் இருந்தபொழுது ராஜாராம்ராவ் என்ற அரசு அலுவலரை, சமஸ்த்தான "இள்ளெபிெரிடிஷ் -5. ק (פ நியமனம் செய்தது திவான் என்பது அமைச்சர் என்ற பொருளில் உள்ள பார்சகச் சொல். பாஸ்கர சேதுபதி மன்னர் நிர்வாகப்ப்ொறுப்பை 3-4-1889ல் ஏற்ற பிறகும் மன்னரது நேரடியான உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இந்த அலுவலர். ஆறு ஆண்டுகள் கழித்து மன் னர் நிர்வாகத்தில் இருந்து விலகிக்கொண்டு, தமது மைனர் மகன் முத்துராமலிங்க சேதுபதியை அவரது வாரிசாக நியமனம் செய்த பொழுதும் (12-7-1895) இதே திவானை மைனரது டிரஸ்டியாக மன்னர் நியமித்தார் ஆனால் விரைவிலேயே இந்த தி வானின் மீது மன் னருக்கு அதிருப்தி ஏற்பட்டது. மன்னரது நெருக்கமான கண்பர் தேவகோட்டை AL.AE-இராமசாமி தெட்டியார் என்பவர், இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த இரவிசேரி, திருமண வயல் மாகாணங்களை திவானிட மிருந்து குத்தகைக்கு பெற்றது சம்பந்தமான சில ஊழல் கள் நடந்து இருப்பதாகத் தோற்றுகிறது. இதனால் திவான் தமது பதவி விலகல் கடிதத்தை அரசுக்கு அனுப் பிய பொழுதும், அதனை ஏற்றுக்கொள்ளாது. அன்றைய அரசு அவரை பதவி நீக்கம் செய்து உத்திரவிட்டது. பதவி விலகலுக்கும் பதவி நீக்கத்திற்கும் மிகுந்த வேறு பாடு இருக்கிறதல்லவா! அப்பொழுது இராமேசுவரத்தில் இருந்த மன்னருக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்ட பொழுது, மன்னர் அவலத்திற்குள்ளான அந்த அலுவலரது நிலைக்காக மிக வும் வேதனையடைந்தார். அப்பொழுது ராஜாராம் ராவிற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். 'இந்த கடிதத்தை இங்கு தர்ம சேதுவில் இருந்து எழுதுகிறேன். உங்களுக்காக பச் சாதாபப்படுகிறேன். உங்கள் விசயத்தில் எந்த அளவிற்கு நான் குற்றவாளி என்பதை இந்த தர்ம சேது அறியும்.”* 26-12-1891-ந் தேதி இராெேரத்தில் இருதி திாவன் ராஜாராம் ராவிற்கு அனுப்பிய கடிதம்,