பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அன்றாட வாழ்விலும் தமது ஆன்மீக நெறியைப் பிரதி பவிக்கும் செயல்களை விரும்பி மேற்கொண்டார். சைவ சமயத்தில் எப்பொழுதும் திளைத்து நின்றது, அவர் தமது அந்தரங்க பணியாளர் அனைவரது இயற்பெயர் களையும் மாற்றி, சிவநாமங்களையே குட்டி, அந்தப் பெயர்களில் அவர்களை அழைத்து மகிழ்ந்தார். அப்பூதி அடிகளாரின் வாழ்வை நினைவுபடுத்தும் இவரது அற வாழ்வு, இவரைச் சைவராக மட்டுமின்றி, சித்தாந்த, சமரச நன்னிலை கண்ட சான்றோராகவும் எடுத்துக் காட்டுகிறது. வைணவத்திலும் சைவமே சிறந்ததென வாதிடும் இவர் வைணவச்சான்றோரான மகாவித்வான் ரா ராகவ ஐயங்காரை தமது அன்புநேசராகவும் ஆன்மீக ஆசானாக வும் கொண்டு இருந்தார். அவரிடத்தில் மட்டற்ற மரியா தையுடன் பழகி வந்தார். மகாவித்வானும், தம்மை மாற்றுச் சமயத்தினர் என்று சிறிதும் எண்ணாமல், மன்னரிடத்திலும் மன்னரது தயாரான முத்தாத்தாள் நாச்சியாரிடத்திலும் மிகுந்த வாஞ்சையுடன் நடந்து வந்தார். மன்னரும் மாதேவியாரும் அவரை 'சுவாமிகள்' என்ற சிறப்புப் பெயரால் மரியாதையுடன் அழைத்து வந்தனர். சிறந்த அன்பளிப்புகளையும் அவருக்கு அடிக்கடி. வழங்கி பெருமைப் படுத்தினர் மகாவித்வானுக்கு இராம நாதபுரத்தில் நல்ல இல்லம் ஒன்றை அமைத்துக் கொடுத்த துடன், இராமநாதபுரம் நகருக்கு அண்மையில் வைகை யாற்றுப் பாசனத்தில் விளைநிலங்களையும் அற்கொடை யாக வழங்கினார்.38 மற்றும், மகாவித்வான் அவர்கள் மன்னரைச் சந்திக்க அரண்மனை வந்து போவதற்கு, தந்தப் பல்லக்கு ஒன்றையும அளித்தார். ஒருமுறை புதிதாக வெளியிடப்பட்ட 'கந்தபுராணச் சுருக்கம்” என்ற நூலை படித்து முடித்தவுடன் அதன் முகப்பில் நாற்கலையும் தேர் புலவர் நாணுவரே, நீல்வி லத்தில் பாற்கரனைச் சாருமொரு ராகவனைப் பார்த் தலுமே", என்ற கவிதைத் தொடரினை எழுதிக் கை 38. இந்த விளைநிலங்கள் பரமக்குடி வட்டம் புகலூரி லும், சிரகிக்கோட்டையிலும் உள்ளன. r