பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நாடுகள் இந்த இராமநாதபுரம் அரசருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளன. முதன் முதலில் சிகாகோ பேரவைக்கு நான் செல்ல வேண்டும் என்ற கருத்தை என்னுள் புகுத் தியவர் நீங்கள். தொடர்ந்து என்னை அதற்காக வலி யுறுத்தி வற்புறுத்தி வந்தவரும் நீங்கள்தான். அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதைத் தீர்க்க தரிசனத்துடன் உணர்ந்து. என் து கரங்களைப் பற்றி இதுவரையிலும் என்னை ஊக்குவிப்பதற்கும் நீங்கள் தவறவில்லை. ஆதலால் எனக்கு எய்தியுள்ள வெற்றிகளுக் காக முதலில் மகிழ்ச்சியடையவர் நீங்களேதான். இந்தக் காரணத்தினர் ல், தாயகம் திரும்பும் வழியில் தங்களைச் சந்திப்பதற்காகவே உங்களுடைய நாட்டில் முதலில் கால் வைத்துள்ளேன்' என்று சுவாமிகள் தமது கணிவினை மன்னரை நோக்கி வெளியிட்டார். ஆடம்பரமில்லாது, மிகுந்த அடக்கத்துடன் எளிய வாழ்க்கையில் தொய்ந்து வாழும் சிறந்த பணியாளரும் பெருங்கொடையாளியுமான பாஸ்கரசேதுபதி மன்னரை யாரும் பாராட்டுவது இயல்பு. ஆனால் மன்னர்களைத் துரும்பாக மதிக்கும் துறவியொருவர் இவ்வளவு ஆழமான அன்பு உண்ர்வுகளுடன், நன்றிப்பெருக்கு மேலிட், பாசத் துடன் பாராட்டிப் புகழ்வது என்பது உண்மையை வெளிப்படுத்துவது என்பதைத் தவிர் வேறு என்னவாக இருக்க முடியும்? இந்திய நாட்டின் ஏற்றத்திற்கு இந்து சமயத்தின் சிறப்பிற்கு இன்றைக்கு துாறு ஆண்டுகளுக்கு முன்னர், ப்ொன்னையும், பொருளையும் அள்ளி அள்ளி வழங்கியவர்-இந்த பாஸ்கர சேதுபதி மன்ன்ர் ஒருவர் தானே நூற்றுக்கணக்கான சுதேச மன்னர்கள் பெரும் புகழ் பெற்று வட இமய்ம் முதல் தென்குமரி வரை வியாபித்து இருந்த பொழுதும், செயற்கரிய இந்தச் சாதனை யைச் செய்தவர் இராமநாதபுரம் மன்னர்தானே கேளிக்கைகளிலும் கேடு விளைவிக்கும் களியாட்டச். செயல்களிலும் பெரும்பாலான மன்னர்கள் ஈடுபட்டு பெறுவதற்கரிய வாழ்வை பயனற்ற விளையாட்டாக கழித்துக் கொண்டு இருந்த பொழுது, நமது பாரத நாட்டையும் அதன் பழம் பெருமையையும் நிலைநாட்ட, நினைத்து முனைந்தவர். இந்த நல்ல மனிதர் ஒரு வர்தான் என்பது வரலாறு.