பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வந்தார். அவர் இயற்றிய இசைப்பாடல்கள் கி.பி. 1880ல் ஸ்வர tேத்தனைகள்’ என்ற தலைப்பில் வெளி வந்துள் ளன. இவரது திறமையை அங்கீகரிக்கும் முறையில் இராணி பர்வத வர்த்தினி நாச்சியார் பாலையம்பட்டி, பாலவநத்தம், பகுதிகள் உள்ள சில கிராமங்களை க் கொண்ட புதிய ஜமீனை தோற்றுவித்து அவருக்கு வழங் கினார். ஜமீன்தாரான பொன்னுச்சாமித் தேவர வர்கள் இராமநாதபுரத்தில் கி பி. 1870 ல் இயற்கை எய்தினார். உடன் பிறந்த தம்பி மன்னர் பாஸ்கரரது உடன்பிறந்த ஒரே சகோதரர் இராஜா-இனகர் ஆவார். தமது தமையனை ப் போன்றே இவர் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார். குறிப பாக இலக்கியம், இசை, ஓவியம், சிற்பம், ஆகிய துண் கலைகளிலும், துப்பாக்கி சுடுதல், குதிரை ஏற்றம் ஆகிய வல்லமைக் கலைகளிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் , இல்லை என்னும் அளவில் உயர்ந்து நின்றார். மேலும் இவர் நல்ல எழுத்தாளருங்கூட. ஆங்கிலத்தில் அழகும், சுவையும் சொட்ட எழுத வல்லவர் 25.1.1897 ல் இராமநாதபுரத்திற்கு வருகை தந்த சுவாமி விவேகானந் தருக்கு பொதுமக்கள் சார்பாக வழங்கப்பட்ட ஆங்கில வரவேற்பு மடல் இவரால் வரையப்பட்டது. ஆங்கில கவிதைகளைப் பாடி இன்புறுவதிலும் கேட்போர் மகி ழும் வண்ணம் பியோனோவை இசைப்பதிலும் இவருக்கு பெரு விருப்பு இருந்தது. தமது சிறந்த சமஸ்கிருத மொழிப் பயிற்சியினால் வியாகரணம், தர்க்கசாஸ்திரம் ஆகியவைகளுக்கு பொருத்தமான புதிய விளக்கங்களை சொல்லும் பண்டிதராகவும் திகழ்ந்தார். 1926 ல் இராமநாதபுரம் நகருக்கு வருகை தந்த சென்னை கவர்னர் கோசனிடம் நினைவுப் பரிசாக இவரே புனைந்த The Ballad of Bder wai என்ற ஆங்கில கவிதை நூலை வழங்கினார் இவரதுமொழி பாண்டியத் துக்கு ஏற்ற சான்றாக இந்த நாலும் மற்றும் The Divine Tragedy. The Hidden Truth of Valmeeki, *t or user colouff, துள்ளன. தமிழிலும் இந்து மத சூட்சமம்” என்ற துலை எழுதியுள்ளார்.