பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 சுப்பிரமணிய அய்யரிடம் அனுப்பி வைத்து இசைக் கலையை முறையாக கற்கச் செய்தார். பிற்காலத்தில் இந்த மாணவர் இசை உலகில் மிகச்சிறந்த லட்சன வித்துவானாக உயர்வு பெற்று பூச்சி சீனிவாச அய்யங் கார் என பேரும் புகழும் பெற்றதுடன் சேதுபதி மன்ன ரது அவையின் வித் துவானாகவும் விளங்கினார். இவ்விதம் பல துறைகளிலும், முன்னோடி மனித ராகத் திகழ்ந்த தேவர் அவர்கள், நாட்டுப் பணியிலும் தமது முத் திரையைப் பதித்துள்ளார். வெள்ளையரின் ஆதிக்கக் கொள்ளையை முறியடிப்பதற்கு அவர்களுக்கு எதிராகக் கொளும்பு - துரத்துக்குடி இடையில் சுதேசி கப்பல் போக்குவரத்தி னை நடத்த திட்டமிட்ட வ.உ. சி தம்பரம் பிள்ளையின் உன்னத முயற்சிக்கு உறுதுணை யாக இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயை அவருக்கு வழங் கினார். இதன் காரணமாக '; சுதேசிக் கப்பல் துாத்துக்குடியிலிருந்து கொத்மிபுக்குப் புறப்பட்டது. வெள்ளையராட்சிக்குக் கட்டுப்பட்ட ஜமீன்தாராக இருந் தும் நாட்டுப்பற் று காரணமாக மிகத் துணிச்சலாக ஈடு பட்ட இந்தப் பெருமகனை விடுதலை வரலாறு புறக் கணித்துவிட்டது வேதனை க்குரியதாகும். பெறுதற்குரிய மானுடப் பிறவியை பல்லாற்றானும் பயனுள்ளதாக அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளில் நாட்டு மக்களுக்கும், மொழிக்கும் இசைக்கும், இடை விடாது முனைப்புடன் தொண்டாற்றிய இந்தத் தமிழ் மகன் தமது நாற்பத்து நான்காவது வயதில் புகழுடம்பு எ ப்தினார். தோற்றம் : மறைவு : 21–3 - || 867 2-12-1911