பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ ፲ዑ? தன் பெயர் வசந்தா என்று அறிவித்தாள் அவள். க)ே வளர்ச்சி, சமூக சேவை, குழந்தைப் பயிற்சி முதலிய விஷயங் களில் தனக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டு என்று அவளாகவே சொன்னுள். ஒருவாறு அங்கிருந்து நகர்ந்தாள். போகும் போதோ திரும்பித் திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தபடி சென்ருள். உலகம் பலவிதம்! என்று முனங்கின்ை மாதவன். இவள் நமக்குப் பயன்படக்கூடும் என்று தோன்றுகிறது. இவள் உறவை வளர்க்க முயற்சிப்பது நன்று என்று அவன் மனம் கணக்குப்பண்ணியது. வசந்தாவின் உள்ளமும் அவ்விதமே எண்ணியிருக்க வேண்டும். ஏனெனில் அவள் அந்த வீட்டுக்கு வர நேர்ந்த போதெல்லாம் தோட்டத்துப் பக்கம் வந்தாள். மாதவன் வெளியே காணப்படாவிட்டால், அவன் இருக்குமிடத்தின் அருகே சென்று எட்டிப் பார்த்து, பேச்சுக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டாள். நீங்கள் உங்கள் ரூமை சுத்தமாக வைத்திருக்கிறீர்களே. பேஷ். . சுத்தமே ஒரு அழகுதான். அது எங்கே எல்லோருக் கும் தெரிகிறது!’ என்று ஸர்டிபிகேட் வழங்கினுள் அவள். சிரித்தாள். காரணமில்லாமல், தேவை இல்லாமல்-சிரிக்கும் பண்பு பெற்றவள் அவள் என்பதை மாதவன் புரிந்து கொண்டான். ‘சுத்தம் அழகானது. சுத்தத்துக்குத் துணைபுரியும் வெயில் மிக அழகானது. வீட்டினுள் வெயில் படர்வது நன்று. அதில்லாவிட்டாலும், களிதுலங்கும் சிரிப்பு வீட்டில் நிறைந்திருந்தால் போதும். ஆனந்தம் துளும்பும் சிரிப்பு அகத்தில் மின்னும் இளவெயிலாம் என்பார்கள். சிரித்த முகங்களை நான் ரசிக்கத் தயங்குவதில்லை" என்று கூறினன் ఆమె తొ . - அவள் முகம் செம்மை ஏற்றது. அவள் மகிழ்வு அதிகரித் தது. ஒரு கணம் தலைதாழ்த்தி நின்றவள் மீண்டும் எழில்