பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ ፲27 மறந்துவிடலாம் அம்மா. அவசியம் மறந்துவிடத்தான் வேண்டும் என்ருன். "இதென்ன நாடகம்? ஏணிவ்வளவு கும்பல்?’ என்று கேட்டுக்கொண்டே, குமாரி சம்பா, ஜவுளிப் பொட்டணத் துடன் மாதவன் அருகே வந்து சேர்ந்தாள். காரைத் திறந்து, ஜம்மென்று உட்கார்ந்தாள். உம் ஏறலாமே!’ என்ருள். மாதவன் எதுவுமே நடவாததுபோல், அங்கு நின்றவர் களில் காரையும் அறியாதவன்போல்... காரில் அமர்ந்தான். அவனேயும் அவன் அருகில் இருந்தவளேயும் மாறிமாறிப் பார்த்த காந்திமதி பெருமூச்செறிந்தாள். அவள் கண்கள் கலங்கின. -- "இங்கேயே நிற்பானேன்? உம், நட என்று அவளுக்கு உத்திரவிட்ட அம்பலவாணன் வாங்க மாமா என்று கூறி. முன் நடந்தான். . . . .” - உம். எல்லாம் நம்ம தலைவிதி...காலம் கெட்டுப் போச்சு!’ என்று முனங்கிக்கொண்டே பின்தொடர்ந்தார் பிள்ளை. மாதவன் தொட்டது அனைத்தும் துலங்கும் காலம் அது என்றே தோன்றியது. "சம்பா ஆர்ட் புரடக்ஷன்'ஸின் முதல் படம் பிரமாத மான வெற்றி பெற்றது. அதன் மூலம் குமாரி சம்பா நட்சத் திர மதிப்பு பெற்ருள். மாதவன் புகழ் உயர்ந்துகொண்டே போயிற்று. ரசிக மகா ஜனங்களின் உள்ளத்திலே உறுதியான இடம் பெற்றுவிட்டான் அவன். மாதவன் ரொம்ப nரியஸ்" ஆகவும் நடிக்கவில்லை. ஒரே கோமாளிக் கூத்தும் அடிக்க வில்லை. ஹீரோவுக்கு வேண்டிய காம்பீரியத்துடன் நடத் தான். அதே சமயத்தில் சிறிது கோமாளித்தனத்தையும் கலந்து அளித்தான். கத்திச் சண்டை செய்தான் அவன். அதைக்கூட, அமெரிக்கப் பட உலக நடிகன் ஒருவன் செய் வதுபோல தமாஷாகவும், சாமர்த்தியமாகவும் செய்து