பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷综 மன்னிக்கத் தெரியாதவர் பேசியதாகவோ நீ யாரிடமும் சொல்லக்கூடாது. முக்கியமா உன் அத்தை கிட்டே அப்பா காதுக்கு இந்தச் சங்கதி எட்டவே படாது!’ என்ருள். அவள் கோரிக்கை நியாயமானதாகவே மகனுக்குத் தோன்றியது. அவள் விருப்பத்தை அவன் நிறைவேற்றின்ை. அவள் திரும்பித் திரும்பி அவனைப் பார்த்தபடி, பிரிந்து போக மனம் இல்லாமலே, போய்ச் சேர்ந்தாள். மூன்று தினங்களுக்குப் பிறகு சண்பகம் அவனே அவள் இருந்த குடிசைக்கு அழைத்துக்கொண்டு போனுள். அவளுடைய வறுமை நிலையைப் பளிச்சென்று காட்டிக் கொண்டிருந்தது அந்த இடம். தரையில் ஒரு பையன் படுத்துக் கிடந்தான். அவனுக்கு மூன்று வயதிருக்கும். "உன் தம்பி!” என்று அறிமுகப்படுத்தினுள் தாய். *தான் உன்னேப் பிரிந்து வருகையில், உனக்கும் மூணு வயசு தான் என்று அவள் மெதுவாகச் சொன்னுள். ஏன்? ஏன் என்ன விட்டுட்டு வந்தே? ஏன் அப்புறம் வீட்டுக்கே வரலே? ஏன் இங்கே தனியாக இருக்கிறே? அறிய வேண்டும் எனும் ஆவலில் அவன் அடுக்கினன். அவளோ சிலையாக இருந்தாள். ஆனல் கண்கள் நீரைப் பெருக்கின. பெருமூச்சு பொங்கியது. அப்பா உன் கிட்டே ஒண்ணுமே சொல்லவியா!' என்று தீனமாகக் கேட்டாள் அவள். "ஊம்கூம். அப்பாவுக்குப் பிடிக்காத விஷயம் எதைப் பற்றியும் நான் அவங்ககிட்டே கேட்பது கிடையாது. உன்னை மறந்தாச்சு என்று சொன்னங்க. அம்மா ஒரு கெட்ட சொப்பனம் மாதிரி என்ருங்க. அப்புறம் நான் ஏன் அந்தப் பேச்சை எடுக்கிறேன்?" என்று மகன் தெரிவித்தான். கண்ணிர்த்துளிகள் அவள் கன்னங்களில் உருண்டன. என் தலை எழுத்து. நான் அனுபவிக்கிறேன். நான் ஒரு தப்பு செய்துவிட்டேன். பெரிய தப்புதான். உங்க அப்பா ரொம்ப வும் கோபித்து என்னை வெளியே அனுப்பிவிட்டாங்க.