பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 莎驶 போக்குச் சொல்லி வெளி வட்டாரங்களிலேயே தங்கி விடுவதை வழக்கமாக்கினன். சண்பகத்தின் அழுகையும் முனு முணுப்பும், குறை கூறலும் குற்றம் சாட்டலும் சகிக்கமுடியாத மூட்டைப் ஆச்சித் தொல்லையாகவும் கொசுக் கடியாகவும் அவனுக்கு எரிச்சல் ஊட்டின. அவள் ஒரு குழந்தையைப் பெற்று அளிக்க வும், அவன் விழிப்புற்ற விசுவாமித்திரன் ஆன்ை. பொறுப்பையும் சுமையையும் அதிகப்படுத்திக் கொள்ள மன மில்லாதவளுய், அவளை வெறுத்து ஒதுக்கி, சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ கம்பி நீட்டிவிட்டான். ஆள் அட்ரஸே தெரியாமல் போச்சு! சண்பகம் தன் விதியை, எண்ணி அழுதாள். ஒரு சந்தர்ப் பத்தில், செய்யும் செயலின் தன்மையை அறியாத-அதன் பிந்திய விளைவுகள் பற்றிச் சிந்தியாது-உணர்ச்சிக் கிளு கிளுப்பில் செய்துவிட்ட முட்டாள்தனமான ஒரு செயலுக்கு. பாபத்துக்கு, உரிய தண்டனையைத் தொடர்ந்து அனுபவிக்க நேர்ந்துள்ளது; அந்தப் பொறி அழுதாலும் தீராது, அடித் தாலும் தீராது எனத் தேர்ந்தாள். குழந்தைக்காக உயிர் வாழ்வது என்று தீர்மானித்தாள். இட்டிலி சுட்டும், வடை தயாரித்தும், அப்பளாமிட்டும், வற்றல் வடகங்கள் பண்ணி யும் விற்பனைசெய்வது; நம்பிக்கையான சிலருக்குச் சோறு சமைத்துப் போடுவது; பல வீடுகளுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, வாசல் தெளித்துப் பெருக்குவது போன்ற வேலைகளைச் செய்து காசு சேகரித்து, மிகுந்த சகிப்புத்தன்மை யோடு நாளைக் கழிக்கக் கற்றுக்கொண்டாள். அவள் தன் முதல் மகன் ரத்தினத்தை மறந்தவள் அல்லள். எப்படி மறக்க முடியும்? அவனைப் பார்க்க முடியா மல் போய்விட்டதே என்று ஏங்கித் தவித்தாள். இவ் விஷயத்தில் காலம் அவளுக்குத் துணை புரிந்தது. அவள் இருந்த பெரிய நகரத்துக்கே அவனைக் கொண்டு வந்து சேர்த்தது. அவனைச் சந்திக்க வாய்ப்பும் அளித்தது.