பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 每奚 அன்று அவர் வழக்கம்போல், மினுமினுக்கும் தேக்குமரக் கட்டிலில், ஒய்வாகப் படுத்திருந்தார். உண்ட கிறக்கம். மகனின் நினைப்பு. அவனைப் பார்த்து நாளாச்சு, லிவு வருமே? வந்து சேருவான் என்ற எண்ணம். அவனைப் பற்றிய கனவுகள் அவர் சித்தவெளியில் நிழலாடின. 'அப்பா!' என்ற மென்குரல் அவரைத் திடுக்கிட வைத் தது. ஆங், வந்துட்டியா? இப்பத்தான் வாறையா? என்று கேட்டவாறு பதற்றமாய் எழுந்து உட்கார்ந்தார். விழித்தார். ரத்தினத்தைக் காணவில்லை. வாச ல் நடையில் எவனே ஒரு நோஞ்சான் பயல் நிற்பதைத்தான் கண்டார். என்ன, யாரு நீ?" என்று கேட்டார் பிள்ளை. அதட்ட லாக உருண்டது அவர் குரல். அவர் குரலும், முகத்தோற்றமும் பயந்த சுபாவம் கொண்ட பையனின் உள்ளத்தில் உதைப்பு ஏற்படுத்தியது. அவன் தைரியம் ஓடி மறைந்துவிட்டது. ஊம்? யாருடா நீ? என்ன வேனும்?' என்று மீண்டும் உறுமிஞர் பெரியவர். நான்...நான்...துரை என்று வார்த்தைகளை மென்று. விழுங்க முயன்ருன் அவன். - துரையா? எந்த வீடு உ ன க் கு? யார் வீட்டுக்கு வந்திருக்கிறே? அவருக்கு எதுவும் புரியாத குழப்பம். “இங்கேதான், அப்பாவைப் பார்க்கத்தான் வந்தேன் “இங்கே நான் மட்டும்தான் இருக்கிறேன். உன் அப்பா பேரென்ன?” "மகராஜபிள்ளை." "என்னது?’ என்று உறுமி, அவனை முறைத்துப் பார்த் தார் பிள்ளை. நீ யார் பையன்?’ என்று கேட்டார்.

  • சண்பகம் மகன்."