பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ - 7g அவன் அவளுக்குச் சமீபமாக வந்ததும், நீங்கள் வெளியே போகும்போது நான் பார்த்தேன். எப்படியும் இந்த வழியாகத்தானே திரும்பி வருவீர்கள் என்று காத்திருந் தேன். எவ்வளவு நேரமாக் காத்திருக்கிறேன் தெரியுமா? இன்னிக்கு உங்களுக்கு ஏன் இவ்வளவு நேரம்: என்ருள் அவள. காந்திமதி அவள் பெயர். விசேஷ நாட்களில் பளபள, வென்று துலக்கப்பெற்று பொட்டிட்டு, ஒளி ஏற்றி வைக்கப் படுகிற குத்துவிளக்குபோல் கண் நிறைந்த தோற்றமுடைய பெண் உள்ளத்தின் அன்பும், அழகும், லட்சுமிகரம் என்பது: களே அத்தகைய பொலிவுபூத்த முகத்தில் மலர்ந்து விளங்கும். மாதவனின் மாமா மகள் அவள். இன்றைக்கு விசேஷமான நாள்தான் என்று மெது வாக-ஆஞல், அழுத்தம் தொனிக்கும்படி-உச்சரித்தான் அவன். "என்ன விசேஷம்?" "என்ன விசேஷம் என்பது இருக்கட்டும், நீ சொல்ல விரும்பும் விஷயத்தை முதலில் சொல்லு. "எனக்குக் கல்யாணத்துக்கு நாள் குறித்துவிட்டார்கள். உங்களுக்குத் தெரிந்திருக்குமே?” என்று கூறி அவள் அவன் முகத்தை நோக்கிள்ை. மரத்தின் கீழே சூரிய நிழல் படிந்திருந்தபோதிலும் எங்கும் பட்டப்பகல்போல் பளிச்செனப் பரவிக்கிடந்த ஒளி வெள்ளம் அவ்விடத்தின் இருட்டையும் வெளிறடித்திருந்தது. அனைத்தையும் தனித்தனியே பார்வைப் புலனுக்கு எடுத்துக் காட்டியது. ரொம்ப சந்தோஷம் என்று உணர்ச்சி செத்த குரலில் பேசிஞன் மாதவன். அவனுடைய சிரத்தையின்மையை உணர்ந்து காந்திமதி வேதனைப் பெருமூச்சு உயிர்த்தாள். நான் சந்தோஷம்