பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 75 "பெரியவர்கள் எப்பவும் இளையவர்களின் நலத்தை உத்தேசித்துத்தான் செயல்புரிவார்கள் அல்லது அப்படிச் செயல்புரிவதாகச் சொல்கிருர்கள்..." வறட்டு சிரிப்பு ஒன்று உதிர்ந்தது அவன் உதடுகளி லிருந்து. "இன்று நீங்கள் என்னவோ போல் பேசுகிறீர்களே, அத்தான்?’ - என்றுமே நான் அப்படித் தான் இருந்திருக்கிறேன், கர்ந்தி. ஆனல் உனது உணர்ச்சிப் பெருக்கிலும், இன்ப நினைவிலும், ஆசைக் கனவிலும் உன்னையே மறந்திருந்த நீ என்னை உள்ளது உள்ளபடி அறியவில்லை. நான் வாழத் தெரியாதவன்...வாழ முடியாதவன்..."

  • இப்படியெல்லாம் சொல்லாதீர்கள், அத்தான். எனக்கு நீங்கள்தான் வாழ்வின் ஒளி என்று நம்பியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் ரொம்ப நல்லவர்..."

மாதவன் சிரித்தான்-கசப்பு நிறைந்த சிரிப்பு. - "இப்ப ஏன் சிசிக்கிறீர்கள்?’ என்று திகைப்புடன் வினவினள் அவள். -

  • இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு நீ இப்படிச் சொல்லமாட்டாய், காந்தி:

"நான் மாறிவிடுவேன் என்ரு நினைக்கிறீர்கள்? 'இல்லை... நான் முற்றிலும் மாறிவிடுவேன். மாறத் திட்டமிட்டு விட்டேன்...' அப்படியென்ருல்?’ காலம் கதையை விடுவிக்கும்! காந்தி, உன்னிடம் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன சொன்னலும்-நான் எத்தகைய அயோக்கியனுக மாறியிருந்தாலும்-காலம் என்னை எவ்விதக் கயவனுகவும் கல் நெஞ்சக் கொடியளுகவும் திருத்தி அமைக்கலாம் என்ருலும், உன் இதயத்தில் எனக்காக நீ தந்துள்ள இடத்தை அழித்து