பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&别 மன்னிக்கத் தெரியாதவர் போது, கப்பல் தனக்காக நிறுத்தப்படவில்லை-மற்றவர்கள் தன்னைப்பற்றிக் கவலைகொள்ளவில்லை: இருக்கிருன, செத் தானு என்று அக்கறை காட்டவுமில்லை. அவரவர் கவலையே பெரிதாய், அவரவர் காரியமே முக்கியமாய்ச் செயல்புரி கிருர்கள். அவன் கத்துகிருன், அலறுகிருன். அவனைப் பரிகசிப்பதுபோல் காற்று ஒலமிடுகிறது. அவனைக் கேலி செய்வதுபோல் அலைகள் அவன்மீது மோதி, மூஞ்சியில் அறைந்து ஆர்ப்பரிக்கின்றன. கப்பல் தூர-தூர-துாரமே செல்கிறது. கண்ணுக்குச் சிறிதாகி, புள்ளிபோல் மங்கி, மறைந்தே போகிறது. அவன்-அந்தத் தனிமனிதன் குளிர்ந்த-கருமையானஉப்புச்சுவையே மிகுந்த-வெறிபிடித்த தண்ணிரிலே, செயல் திறம் இழந்த சுண்டெலிபோல் கிடந்து தவிக்கிருன், உலகமெனும் கடலிலே, வாழ்க்கைக் கப்பலில், திராணி யற்ற தனி மனிதர்களுக்கு இத்தகைய கவனிப்புதான் கிடைக் கிறது. தளத்திலே தம் கவலையே பெரிதாகித் தம்மிலே தாமே ஆழ்ந்து விளங்கும் ஜனக்கூட்டம்தான் சமூகம். . . இதை நினைக்கும்போதெல்லாம் மாதவனுக்கு, நீர் வெளியிலே நிலையற்றுத் திண்டாடும் அப்பாவி தானேதான் என்ற எண்ணமே படரும். உடனே அவனுடைய வெறுப்பு மிகுந்த வலிமை பெறும். - நமது வாழ்க்கையைத் தனியொரு கப்பலாக மாற்று வோம். அது வெறும் கப்பலாக இராது. வியாபார கப்ப லாகவோ, கொள்ளைக் கப்பலாகவோ விளங்காது. இதர கப்பல்களை மூழ்கடிக்கும் போர்க்கப்பலாக-வலுமிகுந்த நீர் மூழ்கியாக-முன்னேறும் என்று அவன் நெஞ்சோடு கிளத்து வதும் உண்டு. வேளை வரவில்லை, இன்னும் வேளைவரவில்லை என்று காத்திருந்த மாதவன், உரிய காலத்தைக் கணித்துக் கொண்டான். கிளம்பிவிட்டான். தனது துணிச்சலே துணையாக; பொங்கிப் பெருகும் வெறுப்பே துணிச்சலுக்குரிய ஜீவசத்தாக: