பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அறிஞரின் அருங்கருத்துக்கள் அவர் செப்பியுள்ளார். ' அன்பிற்கும் உண்டோ அடைக்குத் தாழ்?’ என்ற திருக்குறட் பகுதியோடு இதனை ஒப்பிடலாம். பிற நாடுகளிற் போய் மக்கள் குடியேறுகிருர்கள் என்ருல், அந்தந்த நாட்டினில் உள்ள மக்களுக்குத் தொண்டாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு குடியேறுதல்வேண்டும் என்று சுவைட்சர் கருதினர். அதனுல், ' நம் முடைய கைத்தொழிலுக்கு வேண்டிய கருவிகளை உண்டாக்குவதற்கு மாத்திரமா இந்த ஊருக்கு நாம் தலைவராய் உள்ளோம்? இந்த மக்கள் மேன்மேல் இனிய வாழ்க்கை நடத்துதற்குரிய வ்கையிற் புதிய சமுதாய வாழ்க்கைமுறையைப் பட்ைத்துவிடுதல் நம்முடைய பொறுப்பன்ருே?’ என்று ஒரு முறை அவர் பேசினர். புத்தகங்களிலும் இத்தகைய கருத்துக்களை அவர் நிரம்ப வழங்கியுள்ளார். உலகத்தில் உள்ள நாடுகளிற் பல கிறித்துவ சமயத்தைச் சேர்ந்த நாடுகளாக இருந்தும், ஒரு நாடு மற்ருெரு நாட்டோடு போட்டியிட்டுக் கொண்டு போரில் ஈடுபடுவது சுவைட்சருக்குப் பிடிக்கவில்லை. கிறித்துவ சமயம் அன்பின் அடிப் படையில் எழுப்பப்பட்டது என்பது உண்மை யானுல், பகைவர்களிடத்தும் அன்பு காட்டவேண் டும் என்றும், தீமை செய்தவர்க்கும் நன்மையையே செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துஞ் சமயம் அது என்பது உண்மையானல், உலகத்தில் உள்ள நாடுகளிற் பல முன்னரே போரினின்று விடுபட வேண்டும் என்றும், போருக்குச் செல்லுதல் கூடாது என்றும் எண்ணி இருக்கமாட்டாவா