பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளில் ஒளி 89 எல்லாவற்றின்கண்ணும் இறைப்பொருள் காணப் படுகிறது என்ற நம்பிக்கை வேண்டும் என்பதை அவர் அடிக்கடி வற்புறுத்தினர். இறைவனிடத்தில் ஒருவர் அன்புடையவராக இருக்கிருர் என்பது இறைவனுற் படைக்கப்பட்டுள்ள பல்வேறு உயிர்ப் பொருள்களிடத்திலும் ஒருவர் அன்புடையவராக இருக்கின்ருர் என்பதஞல் விளங்கவேண்டும் என விளம்பினர். ' உயிர்களின் தொழுதகைமை” என்பதிலிருந்து உயிர்ப்பொருள்கள் எல்லாவற் றின் கண்ணும் பேரன்புடைமை தோற்றுதல் கூடும் என்றும், தோற்றுதல் வேண்டும் என்றும் அடிக்கடி அவர் கூறி வற்புறுத்துவது உண்டு. ஒருவர் அற வழியில் நடக்க முற்படுகிருர் என்ருல், அவர் உண்மையாகச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிருர் என்பது கருத்து. அச்சிந் தனையில்ை உலகத்தில் எல்லாப் பொருள்களும் வாழ விரும்புகின்றன என்பதை ஒருவர் காணுதல் கூடும் என்று சுவைட்சர் எடுத்துக் காட்டினர். உலகத்தில் உள்ள பல்வேறு பொருள்களைப்பற்றி ஆழமாகவும் அகலமாகவும் அறிந்துகொள்ளுதற்கு விஞ்ஞான அறிவு பயன்படலாம். உலகத்தில் உள்ள பல்வேறு பொருள்கள் எவ்வாறு தோன்று கின்றன, எவ்வாறு வாழ்கின்றன, எவ்வாறு மடி கின்றன என்பதற்குப் பல விளக்கங்கள் விஞ்ஞான வளர்ச்சி அளித்தல்கூடும். முன்னர் இப்பொரு ளிலே உயிர் உண்டு என்று எதிர்பார்க்கப்படாத இடத்தில் கூட உயிருண்டு என்பதைக் கண்டு பிடித்து விஞ்ஞானம் கூறலாம். பூக்கின்ற ஒரு