பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 இருளில் ஒளி மரத்தைப் பார்த்து, கற்றிலாத ஒரு மனிதன் கொள்ளும் பேருவகை சிறுபெருங் கண்ணுடி துணை யாக ஆராய்ச்சி செய்யும் நுணங்கியல் அறிவாளி கட்குச் சில வேளைகளில் உண்டாதல் இல்லை. பூக் களின் வாழ்க்கை முறையை அறிந்துவிட்டதாக ஒருவன் வீண் ஆடம்பரம் செய்துகொள்ளலாம். ஆகுல், உண்மையில் உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் வாழ விரும்புகின்றன என்ற உண் மையைத் தாவர நூல் ஆராய்ச்சியாளன் நன்ருக உணர்ந்துகொள்கின்றன என்பது யேப்பாடு எனச் சுவைட்சர் கூறிஞர். - ஒருவர் நன்ருகச் சிந்திக்கச் சிந்திக்க, உலகப் பொருள்களைத் துய்க்கத் துய்க்கத் தலைப்பட, உயிர்ப்பொருள்கள் அனைத்தும் வணங்கத்தக்கன என்ற உயரிய முடிவிற்கு வருவர்; தத்துவநூற் பேராசிரியர்கள் சிலர் நான் நினைக்கிறேன், நான் சிந்திக்கிறேன் ; ஆகையால் வாழ்கிறேன்.” என்று கூறியுள்ளார்கள். ஆல்ை, சுவைட்சரோ ' உயிர் வாழ விரும்புகின்ற உயிர்ப்பொருள்களி டையே வாழவிரும்பும் உயிராகிய நான் உள்ளேன்” என்பதைக் கூதிப் பலமுறை விளக்கியுள்ளார். நான் வாழவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப் படையில், நான் மேன்மேலும் வளர்ச்சியுற வேண் டும் என்ற எண்ணமும், இன்பங்கள் பெறவேண் டும் என்ற எண்னமும் எழுகின்றன. நான் வாழ வேண்டும் என்ற எண்னத்தின் அடிப்படையில், நான் அழிக்கப்படலாகாது எனக் கருதுகிற கருத் தும், துன்பம் அடையக் கூடாது எனக் கருதுகிற