பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45

போனா... சே என்னதான் பெரிய மனுஷன் னாலும் அவரும் ஒரு ஆண்பிள்ளை தானேடா ? என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்ட கோதண் டம், அதற்கு மேலும் தள்ளாட மாட்டாதவன் போல், தட்டாமாலை சுற்றிக் கொண்டு தரையில் சுருண்டு படுத்து விட்டான்.

இதைக் கேட்ட ஆறுமுகத்திற்கு என்ன தோன்றியதோ என்னமோ, பொறிக்கி நாயே.. உன் பெண் சாதியும் தாண்டா அங்கே போயி ஒப்பாரி வைச்சிருக்கா, நம்ம எஜமானைப் பத்தி அது மட்டும் சொல்லாதே; நாக்கு அழுவிப் பூடும்’’, என்று முதலாளிக்கு வக்காலத்து வாங்கிப் பேச எண்ணினான். ஆனால், அதற்குள் ஒரு காட்சி பொறி தட்டினாற் போல் அவன் நினை வுக்கு வந்தது

அன்றொரு நாள், அவன் காலை வேளையில் முதலாளி வீட்டுக்குப் போனதும்

தலையில் தன்னால் அடிபட்ட காயத்துடன் தன் மனைவி பூவாயி எஜமான் அருகில் நின்று கொண்டிருந்ததும் -

தான் வருவதை தூரத்தில் பார்த்து விட்ட முதலாளி தன் மனைவியிடம் ஏதோ சாடை காட்டி உள்ளே அனுப்பிவிட்டதையும் -