பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

87

வைத்தியாய்யா மருந்து வெச்சுக் கட்டி; கஷாயமும் கொடுத்திட்டாரு. பயப்பட ஒண்ணு மில்லேன்னாரு’’ என்று அவளுக்கு ஆறுதலான வார்த்தையும் கூறிவிட்டு, வந்தவர்கள் போய்விட் டார்கள்.

ராமனுக்கு மயக்கம் தெளிவதும்; மீண்டும் மயங்குவதுமாக இருந்தான். -

நினைவு திரும்பும் போதெல்லாம், அந்தப் பாவி கூடச் சேராதேன்னு அடிச்சிக்கிட்டேனே; என் பேச்சைக் கேட்டியா?’ என்று தன் புருஷ னிடம் பொன்னி புலம்பினாள்.

இப்படி ஒரு குடி கேக்குதா! பாவி உன்னை ஒரேயடியாக் கொன்னு போட்டிருந்தா நானும் புள்ளங்களும் தெருவிலே நிக்க வேண்டி வருமே. எங்களுக்கு யாரு ஒருவாய் கஞ்சித்தண்ணி ஊத்து வாங்க?’ என்று அவன் தலையை வருடியபடி அழுதாள்.

இந்த அணியாயத்தை உடனே பூவாயியிடம் போய்ச் சொல்லி ஒரு குரல் அழுதால்தான் அவள் மனசுக்கு ஆறுதல் ஏற்படும் போல் இருந்தது.

‘எல்லாம் விடிஞ்சு பாத்துக்கலாம்’ என்று ராமன் தடுத்தான். அவள் கேட்கவில்லை.

புள்ளைங்களை எழுப்பிப் புருஷன் தலைமாட் டில் உட்கார வைத்துவிட்டு, அடங்காத துயரத்