உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர்

37


ஆகிய ஐவகை ஒளிப்பிழம்புகள் ஒருங்கிணைந்தால் தோன்றும் ஒளிபோல இவனது பொலிவும் புகழும் விளங்கின[1]. இவனது புகழ் திருமாலின் புகழ்போலப் பரவியிருந்தது[2]. இவனது ஆட்சிக்குக்கீழ் இருந்த நாடுகள் வளமுடனும், இவனைத் எதிர்த்த நாடுகளின் வளமை பாழடைந்தும் காணப்பட்டன[3].

இசை வேட்கை

இவனது தந்தை உதியஞ்சேரல் இன்னிசை முழக்குடன் மகிழ்வாக வாழ்ந்தவன்[4]. இவனும் மகிழ்ச்சியால் முழக்கும் முரசொலியைக் கேட்டுத் தன்னையே பரிசிலாகக் கொடுத்தான்[5] இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இசையின்மீது இருந்த ஈடுபாடு நன்கு விளங்கும்.

பெற்றோர்

இவனது முன்னோர்கள் நாவலந் தண்பொழில் முழுவதும் ஆட்சிபுரிந்து புகழுடன் விளங்கினர்[6]. இவனது தந்தை அந்து வஞ்சேரலாகும்; தாயார் நல்லினி ஆகும்.

மனைவியின் மாண்புகள்

இவனது மனைவி சிறந்த அழகியாவாள்[7]. அடக்கமான தோற்றப் பொலிவினை உடையவள்[8]. பெரிய சான்றாண்மைப் பண்புகள் அவளிடம் அமையப் பெற்றன; நாணம் மிக்கவள்;[9] கணவனிடம் ஊடல் கொள்ளாத ஆறிய கற்பினை உடையவளாக விளங்கினாள். கணவனொடு ஊடிய காலத்தும் இனிய சொற்களையே கூறுவாள்[10]. அவளே வேளாவிக் கோமான் பதுமன் மகளாவாள்[11]. இவன் பெற்ற பிள்ளைகள் 4, 6 ஆம் பத்தில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர்.

'சோழன் மணக்கிள்ளி'யின் மகள் நற்சோணை என்னும் பெயருடைய மற்றொரு பெண்ணை இவன் மணந்தான்[12]. இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இருவர். மூத்தவன் பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்தின் தலைவன். இளையவன் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள்.


  1. பதிற். 14 : 3 - 4
  2. ஷை 15 : 39
  3. ஷை 13 : 19 - 28, 15 : 1 - 8
  4. ஷை பதி, 2 : 2
  5. ஷை 15 : 21
  6. ஷை 14 : 19 - 20
  7. ஷை 14 : 13 - 15
  8. ஷை 16 : 10 'அடங்கிய சாயல்'
  9. ஷை 19 : 14
  10. ஷை 16 : 10
  11. ஷை பதி. 4 : 2-3, 6 : 1-2
  12. ஷை 5 : 3