உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஆனந்தர்: அணுக்கத் தொண்டர்

கௌதம புத்தர் புத்த நிலையை அடைந்த பிறகு ஏறக் குறைய இருபது ஆண்டு வரையில், நிரந்தரமான அணுக்கத் தொண்டரை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அவ்வப்போது ஒவ்வொரு சீடர் அவருக்கு அணுக்கத் தொண்டராக இருந்து வந்தனர். சிலகாலம், நாகச மாலர் அணுக்கத் தொண்டராக இருந்து அவர் செல்லுமிடங் களுக்குத் திரு ஓட்டையும் சீவர ஆடையையும் எடுத்துச் செல்வார். இன்னொரு சமயம், நாகிதர் அணுக்கத் தொண்டராக இருப்பார். வேறொரு சமயம் உபவாணர்; மற்றொரு சமயம் சுனக்கதர். இவ்வாறே சுந்தர், சாகதர், மேகியர் முதலானவர்கள் அவ்வக் காலங்களில் பகவரின் அணுக்கத் தொண்டராக இருந்தார்கள். பகவரும் இன்னார்தான் தமக்கு ஊழியராக இருக்கவேண்டும் என்று விரும்பவில்லை. இவ்வாறு ஆண்டுகள் பல கழிந்தன. கடைசியில், ஏறக்குறைய ஐம்பத்தைந் தாவது வயதில் நிரந்தரமான ஒரு அணுக்கத் தொண்டர் தமக்கு வேண்டுமென்று பகவன் புத்தருக்குத் தோன்றியது.

ஒரு நாள் கந்தகுடி என்னும் அரங்கத்திலே பகவன் புத்தர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். சீடர்களான பிக்குகள் அவரைச் சூழ்ந்து அமர்ந்திருந்தார்கள்; அப்போது பகவர் அவர்களை நோக்கி இவ்வாறு அருளிச் செய்தார்.

“பிக்குகாள்! எனக்கு வயதாகிறது. எனக்கு அணுக்கத் தொண்டராக இருந்து பணிவிடை செய்கிற பிக்குகள், இந்தப் பக்கம் போ என்றால், இன்னொரு பக்கம் போகிறார்கள். சிலர் திருவோட்டை யும் சீவரத்தையும் தவறவிடுகிறார்கள். எனக்குத் துணை செய்யக் கூடிய நிரந்தரமான அணுக்கத் தொண்டர் வேண்டும். அணுக்கத் தொண்டராக இருக்க விருப்பம் உள்ளவர் கூறுங்கள்.

இதைக் கேட்டதும் பிக்குகளுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று வணக்கத்திற்குரிய சாரி புத்திர தேரர் எழுந்து நின்று தாம் அணுக்கத் தொண்டராக இருக்க விரும்பினார். பகவர், அவரை வேண்டாமென்று மறுத்துவிட்டார். மொக்கல்லான தேரர் எழுந்து தமது விருப்பத்தைத்