உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் பௌத்தக் கதைகள், இசைவாணர் கதைகள்

-

43

தெரிவித்தார். அவரையும் வேண்டாமென்று மறுத்துவிட்டார். இவ்வாறு அங்கிருந்த எல்லாப் பிக்குகளும் ஆர்வத்தோடு அணுக்கத் தொண்டராக இருக்க விரும்பினார்கள். அவர்கள் எல்லோரையும் பகவர் மறுத்துவிட்டார். ஆனந்த தேரர் மட்டும் ஒன்றும் பேசாமல் வாளா அமர்ந்திருந்தார். மற்றப் பிக்குகள் பேசா அவரைப் பார்த்து, பகவர் தங்களை ஏற்றுக்கொள்வார்; தங்கள் விருப்பத்தைக் கூறுங்கள்” என்று சொன்னார்கள்.

66

அப்போது பகவர், “பிக்குகாள்! ஆனந்தருக்கு விருப்பம் இருந்தால் அவரே தமது விருப்பத்தைத் தெரிவிப்பார். நீங்கள் அவரைக் கட்டாயப்படுத்தாதீர்கள்" என்று அருளினார். அப்போதும் பிக்குகள், “ஆனந்தரே! எழுந்திரும் சொல்லும்” என்று கூறினார்கள்.

ஆனந்த தேரர் எழுந்து நின்று கூறினார்: “பகவர், நான்கு பொருள்களை எனக்கு மறுக்கவும், நான்கு பொருள்களை அளிக்கவும்

அரு

ள் புரிந்தால், அடியேன் அணுக்கத் தொண்டனாக இருக்க விரும்புகிறேன். எனக்குப் பகவர் மறுக்க வேண்டிய நான்கு பொருள்கள் என்னவென்றால், 1. பகவருக்கு ஏதேனும் நல்ல உணவு கிடைக்குமானால் அதை அடியேனுக்கு கொடுக்கக் கூடாது. 2. நல்ல ஆடைகள் கிடைத்தால் அதையும் அடியேனுக்குக் கொடுக்கக் கூடாது. 3. பகவருக்கு அளிக்கப்படுவதைப் போன்ற கந்தகுடி (ஆசனம்) அடியேனுக்குக் கொடுக்கக் கூடாது. 4. பகவரைப் பூசை செய்ய யாரேனும் அழைத்தால் அந்த இடத்திற்கு என்னை அழைத்துக் கொண்டு போகக்கூடாது. இந்த நான்கையும் பகவர் எனக்கும் அளிப்பாரானால், மற்றவர்கள், நான் இவற்றைப் பெறுவதற்காகத்தான் அணுக்கத் தொண்டனாக அமர்ந்திருக் கிறேன் என்று சொல்லக் கூடும். ஆகையால் இந்த நான்கையும் பகவர் எனக்கு அளிப்பதில்லை என்று வரம் அருளவேண்டும்.

"பகவர் எனக்கு அருளவேண்டிய மற்ற நான்கு பொருள்கள் எவை என்றால், 1. என்னைப் பூசைசெய்ய யாரேனும் அழைத்தால் அந்தப் பூசையைப் பகவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். 2. பகவரைக் காண விரும்புகிறவர்களை, நான் அழைத்து வந்தால் அவர்களை மறுக்காமல் பகவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். 3. நான் மனம் தடுமாறிக் திகைக்கும் போது பகவர் என்னைத் தேற்றி வழிப் படுத்த வேண்டும். 4. நான் இல்லாத காலத்தில் மற்றவர்களுக்கு உபதேசித்த உபதேசங்களை, எனக்கும்