உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 10.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. மலையில் உருண்ட பாறை

ס

இராசகிருக நகரத்துக்கு அருகிலே குன்றுகளும் காடுகளும் தோட்டங்களும் தோப்புகளும் இருந்தன. ஆகவே, இவ்விடத்தில் இயற்கை அழகும் இனிய காட்சிகளும் நிறைந்திருந்தன. கழுக்குன்றம் என்னும் பொருள் உள்ள கிச்சரகூடமலையும், அதன்மேல் வெளு வனம் என்னும் மூங்கில் காடும் இருந்தன. இந்தக் சிச்சரகூடமலையில் இருந்த வெளுவனத்திலே பகவன் புத்தர் தமது பிக்ஷ சங்கத்துடன் தங்கியிருந்தார். இந்த மலைக்கு அருகிலே ஒரு பெரிய மாந்தோப்பு இருந்தது. முனிவர்மலை என்னும் பொருள் உள்ள இசிகிலி அல்லது இசிகிரி என்னும் குன்று இன்னொரு புறம் காட்சியளித்தது. சித்திரகூட பர்வதம் என்னும் குன்று மற்றொரு பக்கத்தில் அமைந்திருந்தது. இம் மலையின் மேல் காளசிலை என்னும் பெயருள்ள கரிநிறமுள்ள பெரும் பாறை பார்ப்பவர் உள்ளத்திலே அச்சத்தையும் வியப்பையும் உண்டாக்கிக் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. மற்றொரு பக்கம் பண்டவமலை இருந்தது. மத்தருச்சி என்னும் இடமும் மிருகதாய வனமும் இங்கு இருந்த மனத்திற்கினிய காட்சிக்குகந்த இடங்கள். மலைகளும் காடுகளும் தோப்புகளும் தோட்டங்களும் சூழ்ந்திருந்த இந்த இடம் இயற்கைக் காட்சியின் எழிலும் வளமும் அமைந்திருந்தது. சூரியன் மறைகிற மாலை நேரத்திலே, செவ்வானம் பலவிதமான நிறங் களோடு காட்சி வழங்குகிற அந்திப்பொழுதிலே, இவ்விடம் பேரழகு பெற்று விளங்கிற்று. எழில் நிறைந்த இந்த இடத்திலே, மாலை நேரத்திலே பகவன் புத்தர் தமது சீடர்களுடன் நடந்து உலாவுவது வழக்கம்.

ஒரு நாள், மாலை நேரத்திலே சூரியன் மேற்கே மறைந்து கொண்டு பழுக்கக் காய்ச்சிய தங்கத்தகடு போல் காணப் படுகிறான். பற்பல நிறங்களோடு செவ்வானம் காட்சியளிக்கிறது. அடர்ந்த மரங்களிலே பறவை இனங்கள் கூட்டங்கூட்டமாக அமர்ந்து அடங்கு கின்றன. அவ்வாறு அடங்கும் பறவைகள் கலகல வென்று சிலம்பொலி போல இசைக்கும் ஆரவாரம் எங்கும் கேட்கிறது. வெண்ணிறக் கொக்குகள் கூட்டங்கூட்டமாக ஆகாயத்தில் சுற்றிச் சுற்றிப் பறந்து உயரமான மரத்தின்மேல் ஒருங்கே அமர்வதும், மீண்டும் ஒருங்கே