உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

25

கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சி இருந்த படியினாலே. இக்கலம்பகம் அந்நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.

6. இராமீசுரக் கோவை

இக்கோவையை இயற்றியவர் கயாதர நிகண்டு செய்த கயாதரர் ஆவார். இதனைக் கயாதர நிகண்டுச் செய்யுனினால் அறியலாம். என்னை?

"மேவு மரும்பொரு ளந்தாதி கேட்டிந்த மேதினியோர்

தாவும் வினைகெடச் சாற்றிய தென்றமிழ்த் தேவைமன்னுங் கோவையி ராமீ சுரக் கோவை சொன்ன குருபரன்மற்

றோவுத லின்றி யமைத்தான் பத்தாவ தொலியியலே

""

என்னும் செய்யுள் காண்க. தேவைநகரம் என்னும் பெயருள்ள இராமேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது இக்கோவை பாடப்பட்டது. இக்கோவையை இய்றிய கயாதரர் தமது பெயரால் கயாதரம் என்னும் நிகண்டு நூலை இயற்றியுள்ளார். கயாதரம் இப்போது அச்சிடப்பட்டுள்ளது. இவர் இயற்றிய இராமீசுரக் கோவை கிடைக்க வில்லை: கயாதரர், அரும்பொருளந்தாதி என்னும் நூலையும் இயற்றினார். இராமீசுரக் கோவை கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்டது.

7. இன்னிசை மாலை

இப்பெயரையுடைய நூல் ஒன்று இருந்ததென்பது களவியற் காரிகையுரையினால் தெரிகிறது. இவ்வுரையாசிரியர், இந்நூலினின்று இரண்டு வெண்பாக்களை மேற்கோள் காட்டுகிறார். இவற்றில் ஒரு வெண்பாச் சிதைந்து காணப்படுகிறது. சிதையாத வெண்பா இது:

தேனகு முல்லை சொரிய விடைநின்று

மீனகு வாண்மதிபோல் வெண்கூதம்-தான்விரியும் கானக நாட கடனோ மடனோக்கி

யான தினையு மெனல்.

இந்நூலாசிரியர் பெயர் முதலியன தெரியவில்லை. பாட்டுடைத் தலைவன் பெயரும் தெரியவில்லை. இன்னிசை மாலை என்னும் பெயரை நோக்கும்போது, இது இசைத்தமிழ் பற்றிய நூலோ என்ற ஐயம் உண்டாகும். ஆனால், இது இசைத்தமிழ் நூல் அன்று: அகப்