உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

னாலா யிரக்கோ வையும்புனைய

நவில்கென் றிசைத்து நாட்டுபுகழ்

மாலா மெனுங்காங் கயன் வாழ்வு வளஞ்சேர் சோழ மண்டலமே.

இந்நூலுக்கு நாலாயிரக் கோவை. என்று ஏன் பெயர் வாய்த்தது என்பது தெரியவில்லை. நாலாயிரம் பாடல்களால் ஆனது இக்கோவை என்று கருதுவது தவறு. கோவை நூல்கள் 4,000 செய்யுள்களால் பாடப்படுவது மரபன்று. நாலாயிரக் கோவை என்பதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.

26. பல்சந்தமாலை

பல்சந்தமாலை என்னும் நூலிலிருந்து சில செய்யுள்களைக் களவியற் காரிகை யுரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். இதனால் இப்பெயரையுடைய நூல் ஒன்றிருந்தது என்பது தெரிகிறது. பாண்டிநாட்டிலே காயற்பட்டினத்திலே இருந்த ஒரு முகமதியப் பிரபுவின்மீது பாடப்பட்டது. இந்நூல். இது அகப்பொருள் இலக்கிய நூல். களவியற் காரிகைப் பதிப்பாசிரியர் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் இந்நூலைப் பற்றிக் கூறுவது வருமாறு:

“பல்சந்தமாலை யென்ற பெயரையுடைய நூல் சில செய்திகளைப் புலப்படுத்துகின்றது. பன்னிரு பாட்டியலிற் பல்சந்த மாலை யென்றொரு பிரபந்தவகை கூறப்பட்டுள்ளது. இந்நூல் அப்பிரபந்த வகையைச் சார்ந்ததாக இருத்தல் கூடும். ஆனால், இதன் கண்ணின்று களவியற் காரிகை யுரையிற் காட்டப்படுவன வெல்லாம் கலித்துறைச் செய்யுள்களே. இந்நூல் வச்சிரநாட்டு வகுதாபுரியில் அரசு புரிந்துவந்த அஞ்சுவன்னத்தவர் மரபினனாகிய ஓர் முகமதிய மன்னனைக்

குறித்துப் பாடப்பெற்றதாகும்.

வகுதாபுரியை இக்கலாகாலத்திற் காயற்பட்டினம் என வழங்குவர் வகுதாபுரிக்கு ‘அந்துபார்' என வொரு பெயரும் இருத்தல் வேண்டும் என்பது ஒரு செய்யுளால் புலப்படுகின்றது.”

---

பல்சந்தமாலை இயற்றிய ஆசிரியர் பெயர், காலம் முதலியன தெரியவில்லை. பல்சந்தமாலையிலிருந்து எட்டுச் செய்யுள்கள் களவியற் காரிகையுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அச்செய்யுள்கள் இவை: