உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

கருத்தினதே யென்று களிறெறியா னம்ம

தருக்கினனே சான்றோர் மகன்.

26

பல்சான் றீரே பல்சான் றீரே

வீழ்ந்த புரிசைச் சேர்ந்த ஞாயிற்

கணையிற் றூர்ந்த கன்றுமேய் கிடங்கின் மல்லன் மூதூர்ப் பல்சான் றீரே

பலநாள் வருந்தி யிளையரு முதியரும் நன்னுதல் மகளிரு மின்னுங்கண் டுவப்ப யாமங் கொள்பரு மொழிய மேனாட் கொல்படை பொய்த்த குன்றுயர் விழுப்புண் நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையெனக் கருங்குரல் நொச்சி மிலைந்த

திருந்துவேல் விடலை காப்பமைந் தனனே. இவனே.

27

பொரிவரி யன்ன பொங்குளை வயமான் மேலோன் யாரென வினவிற் றோலா உரனுடை யுள்ளத் தொன்னா ருட்குஞ் சுரையமை நெடுவேற் சுடர்ப்பூ ணோனே அவனே யெம்மிறை யீதவன் மாவே கறுவுகொள் நெஞ்சங் கதுவவந் தனனே யாவருங்,

குறுக லோம்புமின் குறைநாண் மறவீர்

நெருந லெல்லி நரைவரு கடுந்திறற்

பருமத யானை பதைப்ப நூறி

நொச்சித் தெரியல் நெடுந்தகை

யடுகளத் தொழிந்தோன் றம்பி தொடுகழல்

அச்ச மறியா னாரணங் கினனே.

28

8

'கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன்

தார்ப்பற்றி யேர்தருந் தோணோக்கித் - தார்ப்பின்னை நாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின்

தேர்க்குழாம் நோக்கித்தன் மானோக்கிக் - கூர்த்த

கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும்.

29