உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

இத்திருக்குறளில் வந்துள்ள களி, களித்தான் என்னும் சொற்கள் கள்ளுண்டு மயங்குதல் என்னும் பொருளில் வந்துள்ளமை நோக்குக.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன் றுடைமை பெறின்.

பேதை ஒருவன் தன் கையில் செல்வம் பெற்றிருப்பது எத்தகையது என்றால், முன்பு பித்தனாய் மயங்கியிருந்த ஒருவன் கள்ளையும் உண்டு களித்தது போன்றதாகும் என்பது இதன் கருத்து. இதில், களித்தல் என்னும் சொல் கள்ளுண்டு மயங்குதல் என்னும் பொருளில் வந்துள்ளது காண்க.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

என்பது திருக்குறள். கள்ளை மனத்தில் நினைத்தாலும் கண்ணால் பார்த்தாலும் களிப்பு உண்டாவது இல்லை. (அருந்தினால் தான் களிப்பு உண்டாகும்) ஆனால், காதலரை நினைத்தாலும், கண்டாலும் மகிழ்ச்சி உண்டாகிறது என்பது இதன் கருத்து. இதிலும், கள்ளருந்திக் களித்தலைக் களித்தல் என்னும் சொல் குறிப்பது காண்க.

கள் அருந்திக் களித்த ஒரு களிமகன், கையில் கள் கலயத்தை ஏந்திக்கொண்டு, உண்ணா நோன்பிருக்கும் சமண சமயத் துறவியிடம் சென்று, “மெய்த்தவத்தீரே! தென்னை மரத்திலிருந்து கிடைத்த இந்தக்கள் கொலையினால் வந்ததன்று. ஆதலின், இக்கள்ளை அருந்தி யோகம் செய்துகொண்டிரும்” என்று கூறி அதனை உண்ணும்படி வேண்டினான் என்று மணிமேகலை கூறுகிறது.

கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந் தேறலின், மெய்த்தவத் தீரே! உண்டு தெளிந்திவ் யோகத் துறுபயன் கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்மென, உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று, உண்மென இரக்குமோர் களிமகன்1

பெருங்கதை என்னும் நூல், கட்குடியன் ஒருவன் செயலைக் கூறுகிறது. உஞ்சை நகரத்தில், கட்குடியன் ஒருவன் கள்ளை நிறையக் குடித்துக் களித்து மயங்கி, அருந்திக் களிக்கும் இந்தச் சுகத்தைத் தவிர, தேவர்களின் “கள் மோக்ஷ உலகம் வருவதானாலும் நான் வேண்டேன்'