உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

59

என்று கூறிப் பாட்டை இசை சிதையப் பாடிய வண்ணம் வீதி வழியே செல்கிறான். செல்பவன் எதிரில் வரும் பார்ப்பனன் ஒருவனைக் கண்டு, ஓடிச் சென்று, “போகாதே, ஆணை, நில். உமது பார்ப்பனக் கூட்டம் கள்ளுண்பதைப் பழித்துப் பேசுகிறது. ஏன் பழிக்கிறது? அதற்குக் காரணம் கூறும். கூறாமற் போனால் உம்மைத் தீண்டி அணைப்பேன் என்று கூறுகிறான்.

துறக்கம் கூடினும் துறந்திவண் நீங்கும் பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி ஆர்த்த வாயன் ஊர்க்களி மூர்க்கன் செவ்வழிக் கீதம் சிதையப் பாடி

அவ்வழி வருமோர் அந்த ணாளனைச் செல்லல் ஆணை நில்லிவண் நீயென எய்தச் சென்று வைதவண் விலக்கி

வழுத்தினே முண்ணுமிவ் வடிநறுந் தேறலைப் பழித்துக் கூறுநின் பார்ப்பனக் கணமது

சொல்லா யாயிற் புல்லுவென் யானெனக்

கையலைத் தோடுமோர் களிமகற் காண்மின்~

وو

அச்செய்யுட்பகுதி. இதில் களி என்னுஞ் சொல் கள்ளுண்டு மகிழ்ந்தவனைக் குறிப்பது காண்க.

கள் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய களிப்பு என்னுஞ் சொல், இழிந்த பொருளில் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டது. இந்தச் சொல், பிற்காலத்தில் மகிழ்ச்சி என்னும் உயர்ந்த பொருளில் வழங்கப் பட்டு, இன்றும் வழங்கி வருகிறது. இச்சொல்லின் இழிந்த பொருள் மறக்கப்பட்டு, இக்காலத்தில் உயர்ந்த பொருள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய இந்தச் சொல் இழிந்த பொருளில் வழங்கப் பட்டிருப்பதை மறந்து விடக்கூடாது. இழிந்த பொருள் கொள்ள வேண்டிய இடத்தில் உயர்ந்த பொருள் கொள்வது முறையன்று. அது பண்டைய நூலாசிரியரின் கருத்துக்கு முரண்பட்டதாக முடியும். ஆகவே, இச்சொல்லுக்கு இடம் அறிந்து பொருள் கொள்ள வேண்டும்.

1.

அடிக் குறிப்புகள்

மணிமேகலை III: 97-103.

2. உஞ்சைக் காண்டம் - 40 : வரி 88-98..