உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாண்டவத் திருவுருவம்

தத்துவப் பொருள்

ஆ ன்மாக்களின் பாசத்தை நீக்கி அவற்றிற்கு வீடுபேறு அளிப்பதற்காக இறைவன் ஐந்தொழில்களை இடைவிடாமல் செய்து கொண்டேயிருக்கிறார். இறைவனோ உருவம் இல்லாதவர்: கண்ணால் காணமுடியாதவர். அவர் இயற்றும் ஐஞ்செயல்களும் கண்ணால் காண முடியாதவை. இறைவன் செய்யும் ஐஞ்செயலைத் தாண்டவம் என்றும் நடனம் என்றும், கூத்து என்றும் கூறுவர். ஆடவல்லானான நடராசப் பெருமான் ஞானக்கூத்தன். ஞானக்கூத்தன் செய்தருளுவது, ‘அரங் கிடை நூலறிவாளர் அறியப்படாததோர் கூத்து.' அறியப்படாத இக் கூத்தை மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டுத் தத்துவம் உணர்ந்த அறிஞர், கூத்தப்பெருமான் உருவத்தைக் கற்பித்தார்கள். அறிஞர் கற்பித்த கற்பனை உருவத்தைக் கலை நூல் அறிந்த சிற்பிகள் அழகுள்ள சிற்ப உருவங் களாக அமைத்துக் கொடுத்தார்கள். இவர்கள் அமைத்துக்கொடுத்த தாண்டவ மூர்த்தச் சிற்பங்கள் கலையழகு நிரம்பியனவாய், கலையின் பண்பாகிய உணர்ச்சியையும் இன்பத்தையும் அளிப்பன வாய்த் திகழ்கின்றன. இச்சிற்ப உருவங்களின் கலையழகை விளக் குவதே இந்நூலின் முக்கிய நோக்கம் என்பதை நினைவுறுத்துகின்றோம். யவனச் சிற்பமும் நமது சிற்பமும்

இந்தச் சிற்பத்தின் செவ்வியை அறிவதற்குமுன்பு, அயல்நாட்டுச் சிற்பத்திற்கும் நமது நாட்டுச் சிற்பத்திற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடுகளை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வேறுபாடுகளை அறியாமல் இவ்வாராய்ச்சியில் இறங்குவது தவறான, உண்மைக்கு மாறு பட்ட முடிவைக் கொள்ளச் செய்யும். அயல் நாட்டுச் சிற்பங்களுக்கும் நமது நாட்டுச் சிற்பங்களுக்கும் உள்ள வேறுயாடுகள்

யாவை?

அயல் நாட்டுச் சிற்பங்கள், உருவங்களை உள்ளது உள்ளவாறே, கண்ணுக்குத் தோன்றுகிறபடியே அமைக்கப்படுவன. நமது நாட்டுத்