பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
123
ஐங்குறுநூறு யா.க.சே.மா.சேரல் இரும்பொறையின் காலத்தில் தொகுக்கப்பட்ட நூலாகையால், அந்நூலில் கூறப்படுகிற ஆதன் அவினி, இவ்வரசன் காலத்திலோ அல்லது இவனுக்கு முன்போ இருந்தவனாதல் வேண்டும்.
கொங்குச் சேரர் பரம்பரை
1. சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை.
அந்துவன்பொறையன் = பொறையன் பெருந்தேவி
(7ஆம் பத்து, பதிகம்) (ஒரு தந்தையின் மகள்)
↓
2. செல்வக்கடுங்கோ வாழியாதன் = வேளாவிக் கோமான்
பெருந்தேவி. 7ஆம் பத்தின் தலைவன். 25 ஆண்டு ஆண்டான்.
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ
வாழியாதன் என்பவன் இவனே. இவனுக்கு இரண்டு
மக்கள் ‘இளந் துணைப்புதல்வர்’ இருந்தார்கள்.
(7ஆம் பத்து 10:21)
↓
─────────────────────
↓↓
3. பெருஞ்சேரல் இரும் பொறைகுட்டுவன்இரும்பொறை =
(தகடூர் எறிந்தவன்) வேண்மாள் அந்துவஞ்செள்ளை,
17ஆண்டு அரசாண்டான். மையூர்கிழான் மகள்.
8ஆம் பத்தின் தலைவன். (9ஆம் பத்து, பதிகம்)
↓ ↓
5. யானைக்கட்சேய் 4.இளஞ்சேரல் இரும்பொறை
மாந்தரஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டு அரசாண்டான்.
(பெருஞ்சேரல் இரும்பொறையின் (9ஆம் பத்துத் தலைவன்).
மகன் எனத் தோன்றுகிறான்.
10ஆம் பத்தின் தலைவன்
இவனாக இருக்கலாம்).
↓
6. சேரமான் கணைக்கால்
இரும்பொறை. (இவன்
யானைக்கட்சேயின் மகனா,
இளஞ்சேரல் இரும்பொறையின்
மகனா என்பது தெரியவில்லை).