உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

செவிலி:

(மனோன்மணியை நோக்கி)

கரும்போ, யாங்கள் விரும்புங் கனியே! முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு யார்வயி னுரைப்பாய்! ஐயோ! இதுவென்? (முனிவரை நோக்கி)

ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள் 145 தேசிக வடிவே! செப்புமா றறிகிலம்

மாசறு மனோன்மணி தன்னுரு மாறி நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம். மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்; நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்; 150 முடியாள் குழலும்; படியாள் இசையும்; தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்; அணியாள் பணியும்; பணியாள் ஏவலும்; மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்; தூங்குவள் போன்றே ஏங்குவள்; எளியை! 155 நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை; கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்; மீட்டுங் கேட்பள்; மீட்டும் பார்ப்பள்; தனியே யிருப்பள்; தனியே சிரிப்பள்! விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்; 160 இங்ஙன மிருக்கில் எங்ஙன மாமோ?

வாணியும் யானும் வருந்திக் கேட்டும் பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள். அரசன் கேட்டும் உரைத்திலள். அன்பாய் முனிவ! நீ வினவியும் மொழியா ளாயின் 165 எவருடன் இனிமேல் இசைப்பள்? தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே!

/87

14

யார்வயின்

யாரிடத்தில்.

மண்ணாள் - கழுவாள்; நீராடாள். மேனி - உடம்பு. குழல் - கூந்தல். தடவாள் – வாசிக்கமாட்டாள். பணி - நகை. பணியாள் - கட்டளை யிடமாட்டாள். அனம் - அன்னம்; உணவு. (இடைக்குறை).