உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

சுந்தர:

ஜீவ:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

(ஜீவகனை நோக்கி)

குழவிப் பருவம் நழுவுங் காலை களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்

புளியம் பழமுந் தோடும் போலாம். 170 காதல் வெள்ளங் கதித்துப் பரந்து மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட இருகரை புரண்டு பெருமூச் செறியில், எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை? தாதா அன்பு போதா தாகும்

175 காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி சாலவும் மறந்தனை போலும். தழைத்துப் படர்கொடி பருவம் அணையில், நட்ட இடமது துறந்துநல் லின்ப மெய்த

அருகுள தருவை யவாவும் அடையின் 180 முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும் அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்; இலையெனில் நலமிழந் தொல்கும். அதனால் நிசிதவே லரசா டவியில்

உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே.

185 எங்குல குருவே! இயம்பிய தொவ்வும். எங்குள திக்கொடிக் கிசைந்த

15

சுந்தர:

பொங்கெழில் பொலியும் புரையறு தருவே.

16

உலகுள மற்றை யரசெலாம் நலமில்

கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய,

190 சகமெலாந் தங்க நிழலது பரப்பித்

தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து, புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து, துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான்

நண்ணும் – அடையும். தரு - மரம். முருகு - அழகு; மணம்; தேன். ஒல்கும் - தளரும். நிசிதவேல் - கூர்மையான வேலையுடைய. அரசாடவி - அரசராகிய காட்டில். புரையறு குற்றம்அற்ற. கள்ளி கள்ளிச்

செடிகள். கருவேற்காடு - முள்ளையுடைய கருவேலமரக்காடு. துன்னலர் பகைவர். துனி - வருத்தம். துடைப்பான் - தீர்க்கும் பொருட்டு.