பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
213
எந்திரக் கருவிகள் வைக்கப்பட்டிருப்பதைப் பதிற்றுப்பத்து ஆறாம் பத்தும் கூறுகிறது.
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
கோள்வன் முதலைய குண்டுகண் அகழி
வானுறவோங்கிய வளைந்துசெய் புரிசை
27
இந்தக் கோட்டைச் சுவரின் வாயிலின் மேல் சிலம்பும் தழையும் தொங்க விடப்பட்டிருந்தன. 'செம்பொறிச் சிலம்பொடு அணி தழை தூங்கும்.28 இதற்குப் பழைய உரையாசிரியர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: 'சிலம்பும் தழையும் புரிசைக் கண்தங்கினவென்றது ஈண்டுப் பொருவீருளரேல் நும்காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடையினையும் ஒழித்து இச்சிலம்பினையும் தழையினையும் அணிமின் என அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவாறென்க. இனி அவற்றை அம்மதிலில் வாழும் வெற்றி மடந்தைக்கு அணியென்பாருமுளர். சங்க காலத்து மதுரைக் கோட்டை வாயிலின் மேலே பந்தும் பாவையும் கட்டித் தொங்விடப் பட்டிருந்தன29 என்பது இங்கு நினைவுகூரத்தகக்து.
வஞ்சிமாநகரத்தின் புறமதிலுக்கு உள்ளே மிளைக்காடு (காவற் காடு) இருந்தது. புறமதில்களைச் சூழ்ந்திருந்த மிளைக்காட்டுக்கு அப்பால் உள்மதில்கள் இருந்தன. உள்மதில்கள் வெண்சுதை பூசப் பெற்று வெள்ளிக்குன்று போலக் காணப்பட்டன.30 இதனால் வஞ்சி மாநகரத்தின் கோட்டைச் சுவர்கள் அகமதில் என்றும் புறமதில் என்றும் இரண்டு மதிற்சுவர்களைக் கொண்டிருந்ததை யறிகிறோம். கோட்டைச் சுவர்களின் மேலே வாயிலுக்குமேல் கொடிகள் பறந்தன. நகரத்துக்குள்ளே போவதற்கு வாயில்கள் இருந்தன.
குணவாயிலும் குடவாயிலும்
நகரத்துக்கு மத்தியில் அகலமான நெடுஞ்சாலையொன்று கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாகச் சென்றது. அந்த நெடுஞ்சாலை கோட்டையின் கிழக்கு வாயிலிருந்து மேற்கே நகரத்தின் மத்தியில் அரண்மனைப் பக்கமாகச் சென்று குடவாயிலைக் கடந்து மேற்கே கடற்கரைப் பக்கத்தில் ..... கோட்டையின் மேற்கு வாயிலுக்குக் குடவாயில் என்று பெயர். நகரத்தின் நடுமையத்தில் அரண்மனைக்கு எதிராக ஓர் அகன்றசாலை வடக்குப் பக்கமாகச் சென்று வடக்கு வாயிலைக் கடந்து சென்றது.