உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

கற்பாறையும் செப்பேடும்

பொதுமக்கள் எழுது

மலைப்பாறைகளிலும், கருங்கற் பலகைகளிலும் பழங் காலத்து அரசர் தங்களுடைய ஆணைகளையும், வெற்றிச் சிறப்புக்களையும் எழுதிவைத்தார்கள். அதுபோலவே, செப்பேடுகளிலும் (செம்புத் தகடுகள்) சாசனங்களை எழுதிவைத்தார்கள். பாறைகளையும், செப்பேடுகளையும் கருவிகளாகப் பயன்படுத்தவில்லை. அரசர்களும் சிற்றரசர்களுமே இவற்றைப் பயன்படுத்தினார்கள். பாறைக் கற்களிலும், செப்பேடுகளிலும் எழுதி வைத்தபடியால் அந்த எழுத்துக்கள் அழிந்து மறைந்து போகாமல் நிலைபெற்று இருக்கின்றன.

குறியீடுகள் முதலியன

பேபரைஸ், தோல். பனையோலை ஆகிய பண்டைக் காலத்து எழுதுகருவிகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி முதலிய குறிகளைக் கொண்டிருக்க வில்லை. அன்றியும், சொற்களைத் தனித்தனியே பிரித்தெழுதாமல் ஒரே கோவையாக எழுத்துக்கள் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதப் பட்ட சுவடிகளைப் படிப்பது கடினமாகவும், வருத்தமாகவும் இருந்தது. பழக்கப்பட்டவர்கள் மட்டும் இவைகளைப் படிக்கமுடியும். பழக்கப் படாதவர்களுக்கு வாசகத் தொடரைப் புரிந்துகொள்வது கடினமாய் இருந்தது. மேல் நாட்டார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், சொற்களைப் பிரித்து எழுதத் தொடங்கினார்கள். இன்னும் பிற்காலத்தில் புள்ளிகள் முதலிய குறியீடுகளை வழங்கினார்கள். நமது நாட்டு ஓலைச்சுவடிக ளில் முற்றுப்புள்ளி முதலிய குறியீடுகள் அமைக்கப்படவில்லை.

பேப்பர் கடதாசி வந்த வரலாறு

6

இப்பொழுது பேப்பர் என்று வழங்குகிற எழுதுதாள்களை முதன் முதல் கண்டுபிடித்தவர் சீனர்கள் என்பதை முன்னமே கூறினோம். கந்தைத் துணி, சணல், நார், வைக்கோல், முசுக்கட்டை மரம் முதலிய பொருள்களிலிருந்து காகிதத்தை அவர்கள் செய்து உபயோகப்படுத்தி வந்தார்கள். சீனர் காகிதத் தாளுக்கு என்ன பெயர் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு இப்போது வழங்கப்படுகிற பேபர் என்னும் பெயர், ‘பேபரைஸ்' என்னும் எகிப்திய மொழியிலிருந்து வந்தது. சீனர் கடதாசியைக் கி.பி. முதல் நூற்றாண்டில் உண்டாக்கினார்கள்.