உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

169

அக்காலத்தில் சீனர் செய்த காகிதத் துண்டுகளில் சில, சீனநாட்டு நெடுஞ்சுவர்களிலிருந்து இப்பொழுது கண்டெடுக்கப் பட்டன. அன்றியும், சீனநாட்டிலே, புதைபொருள் ஆராய்ச்சியாளர், பழைய சீனநாட்டுக் காகிதங்களைப் பூமிக்குள்ளிலிருந்தும் கண்டெடுத்தனர். எலும்பும் ஓடும்

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் அராபியர் பெரு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அக்காலத்தில் அராபியர் அகலமான எலும்புகளையும், ஓடுகளையும் எழுது கருவிகளாக உபயோகித்து வந்தனர். அவர்கள் இந்தியா, சீனா முதலிய கீழ்நாடுகளுடன் பெருத்த வாணிபம் செய்து வந்தார்கள். அக்காலத்தில் மத்திய ஆசியாவில் சமர்கண்டு என்னும் இடத்தில் சீனர் காகிதப் பட்டரை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, காகிதம் செய்துவந்தனர். சீனருடன் அராபியர் போர் செய்து, சீனர் சிலரைச் சிறைப்பிடித்தனர். சிறைப்பட்ட சீனரில் சிலர் காகிதம் செய்யும் தொழிலையறிந்தவர்; அவர்களிடமிருந்து அராபியர் அத் தொழிலைக் கற்றனர். செய்யும் தொழிலின் இரகசியத்தைத் கி.பி. 650-இல் கண்டுகொண்டனர். பிறகு, தாங்களே காகிதம் செய்யத் தொடங்கினார்கள். இவ்விதமாக, அராபியர் காகிதத் தொழிலைச் சீனரிடமிருந்து கற்றுத் தங்கள் நாடுகளில் பரவச் செய்தனர்.

கி.பி. 800-இல் பாக்தாத் நகரத்தில் காகிதப் பட்டரை இருந்தது. கி.பி. 900-இல் எகிப்து நாட்டில் ஒரு காகிதப் பட்டரை இருந்தது. கி.பி. 1100-இல் மொராக்கோ தேசத்தில் காகிதத் தொழிற்சாலை இருந்தது. அராபியர், ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் தேசத்தையும் கைப்பற்றிச் சிலகாலம் அரசாண்டார்கள். அக்காலத்தில், அதாவது, கி.பி. 1150-இல் ஸ்பெயின் தேசத்திலும் அராபியர் காகிதத் தொழிற்சாலையை ஏற்படுத்தினார்கள். பிறகு, அங்கிருந்து பிரான்ஸ், ஜெர்மனி முதலிய நாட்டினர் காகிதம் செய்யக் கற்றுக்கொண்டார்கள். இவ்வாறு, கீழ்நாடாகிய சீன தேசத்திலிருந்து காகிதத் தொழில், அராபியர் வழியாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து அராபியர் மூலமாகவே மேல்நாடுகளுக்குச் சென்றது. பேபரைஸ், தோல் இவைகளைவிடக் கடதாசித்தாள், விலை குறைவாகவும், அதிக வாய்ப்பாகவும் இருந்தபடியால், கடதாசித் தாள்களை மக்கள் நாளுக்கு நாள் அதிகமாகக் கையாளத் தொடங்கினார்கள். ஆகவே, நாளடைவில் பேபரைஸும், தோலும் வழக்கொழிந்துவிட்டன. நமது நாட்டுக்கும்