உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

முகம்பதியர்கள் தாம் கடதாசியை முதன் முதல் கொண்டு வந்தனர். கடதாசி வந்தபிறகு ஓலையில் எழுதும் வழக்கம் மறைந்து விட்டது.

இயந்திரக் காகிதம்

காகிதப் பட்டரையில் கையினாலேயே கடதாசியை அக்காலத் தில் செய்து வந்தார்கள். ஆகவே, அக்கடதாசிகள் தடித்தனவாயும், முரடாயும் இருந்தன. பிறகு 19-ம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பே, பிரான்ஸ் தேசத்தில் மெஷின் என்னும் இயந்திரத் தினால் கடதாசித்தாள் செய்யத் தொடங்கினார்கள். இந்த இயந்திரம் பிற்காலத்தில் படிப்படியாகச் சீர்திருத்தப்பெற்று, இப்போது புதிதாகப் பல நுட்பமான கருவிகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காகித யந்திரங்களின் மூலமாகப் பல வகையான காகிதங்களை நாம் இன்று பெற்றுக் கொள்ளுகிறோம்.

காகிதத் தொழில் செம்மைப்படுத்தப்பட்டது போலவே, நாணற் குழாய்ப் பேனாக்களுக்குப் பதிலாகக் குவில்பேனா என்னும் இறகுப்பேனா வந்து, அதற்குப் பிறகு நிப்பு (Nib) உள்ள முட்பேனா ண்டாகி, இப்போது பௌண்டன் பேனாவும் வழக்காற்றில் இருந்து வருகிறது.

நாம் இப்போது சாதாரணமாக வழங்கிவருகிற பேபர், பேனாக்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் காண்பார்களானால், எவ்வளவு வியப்பும் மகிழ்ச்சியும் அடைவார்கள்!