உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தேவாரத்தில் திருக்குறள்*

“சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப்பொருளிது வென்ற வள்ளுவர் அருளிச்செய்த “திருக்குறள்” தமிழருக்கு மட்டுமின்றி உலகமக்கள் அனைவருக்கும் ஒழுக்கத்தைப் போதிக்கும் ஒப்பற்ற உயர்ந்த நூலாகும். இலத்தீன், கிரீக்கு, இத்தாலி, ஜெர்மனி, பிரெஞ்சு, இங்கிலீஷ் முதலான மேல்நாட்டு மொழிகளிலும், மலை யாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், சமஸ்கிருதம் முதலான இந்திய மொழிகளிலும் இதனை மொழிபெயர்த்திருப்பதிலிருந்தே திருக்குறளின் அருமை பெருமைகளை நன்குணரக்கூடும். திருக்குறளில் கூறப்படாத உயர்ந்த உண்மைகளும், கருத்துக்களும், நீதிகளும், ஒழுக்கங்களும் இல்லையென்றே நிச்சயமாகச் சொல்லலாம். திருக்குறள் செய்யுளையோ அன்றி அதன் கருத்தையோ அன்றி அதன் சொற்றொடரையோ தத்தம்நூல்களில் எடுத்தாளாத தமிழாசிரியர் இலர். இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், திருத்தக்க தேவர், கம்பர் முதலான கவியரசர்கள் திருக்குறள் பாக்களையும், சொற் றொடர்களையும், கருத்துக்களையும் எடுத்தாண்டிருப்பதை அவர்கள் இயற்றிய நூல்களில் காணலாம். சைவ சமய குரவர்களில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் அருளிச்செய்த தேவாரத்தில் திருக்குறள் கருத்துக்களையும் சொற்றொடர்களையும் எடுத்தாண்டிருப்பதை இங்கு விளக்கிக் காட்டுவோம்.

66

I

'கறிமாமிளகும் மிகுவன்மரமும்

மிகவுந்திவருந் நிவவின்கரைமேல்

நெறிவார்குழலா ரவர்காணநடஞ்செய் நெல்வாயிலரத் துறைநின்மலனே வறிதேநிலையா தவிம்மண்ணுலகின்

னரனாகவகுத் தனைநானிலையேன் பொறிவாயி லிவ்வைந்தினை யும்மவியப் பொருதுன்னடி யேபுகுஞ் சூழல்சொல்லே.

இத் தேவாரத்தில்,

செந்தமிழ்ச் செல்வி: 13:10- 1933