பக்கம்:மருதநில மங்கை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை103


அறியாவாறு அகற்றிவிட எண்ணினான். உடனே பெருங்காற்று வீசும் இடமாகப் பார்த்து நின்றான். மலர் இதழ்கள், காற்றில் பறந்து மறைந்தன. அதை அவள் அறியக் கூடாது என அவன் விரும்பினாலும், அவள் அதை அறிந்து கொண்டாள். அறிந்து கொண்டதை அவன் அறியக் கூறி, “ஆகவே, அன்ப! நீ என் மகன் மீது கொண்ட அன்பால் வந்தவன் அல்லை!” என்று கூறிக் குற்றம் சாட்டினாள்.

அவனால் ஏதும் கூற முடியவில்லை. தன் குற்றத்தை மறைப்பது இயலாது என்பதை அறிந்தான். ஆயினும், அதை ஒப்புக் கொள்ளவும் அஞ்சினான். செய்வதறியாது விழித்தான். இறுதியில் மகன் துணையால் அவள் மனத்தை மாற்றத் துணிந்தான். உடனே, “பெண்ணே நான் குற்றம் அற்றவன் என்று கூறகிறேன். அதை ஏற்றுக் கொள்ள நீ மறுக்கிறாய். அவ்வாறே நான் குற்றம் புரிந்தவனாகவே கொள். ஆனால் அது கருதி மாறுபட்டு நிற்பதற்கு இதுவல்ல சமயம். அதோ நிற்கிறான் நம் மகன். அவனைத் தனியே விடுத்து, நாம் முரண்பட்டு நிற்பது முறையாகாது. கன்று தனித்திருக்கப் பார்த்திராது பசு. நாம் பார்த்துப் பிரிந்து நிற்கிறோம். இந்நிலை இனியும் வேண்டாம். கன்றைக் கண்டு விரைந்தடையும் ஆ போல், நம் மகனை, இருவரும் ஏந்தி இன்புறுவோமாக!” என்று கூறிக் கொண்டே, மனைவியின் தோளிற் கிடக்கும் மகனைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டான். அக்காட்சி கண்டு அகம் மகிழ்ந்தாள் அவள்.

“மைஅற விளங்கிய மணிமருள் அவ்வாய், தன்
மெய்பெறா மழலையின் விளங்குபூண் நனைத்தரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/105&oldid=1129668" இலிருந்து மீள்விக்கப்பட்டது