பக்கம்:மருதநில மங்கை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104புலவர் கா. கோவிந்தன்


பொலம்பிறையுள் தாழ்ந்த புனைவினை உருள்கலன்,
நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர,

உறவுஎஞ்சாது இடைகாட்டும் உடைகழல் அந்துகில், 5
அரிபொலி கிண்கிணி ஆர்ப்புஓவா அடிதட்பப்,
பாலோடு அலர்ந்த முலைமறந்து, முற்றத்துக்
கால்வல் தேர்கையின் இயக்கி, நடைபயிற்றா
ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்
போல வரும்என் உயிர். 10

பெரும! விருந்தொடு கைதுவா எம்மையும் உள்ளாய்,
பெருந்தெருவில் கொண்டாடி, ஞாயர் பயிற்றத்
திருந்துபு நீகற்ற சொற்கள் யாம் கேட்ப,
மருந்துஒவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றாப்
பெருந் தகாய் ! கூறு சில 15

எல்இழாய்! சேய்நின்று, நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே,
வாய்ஓடி ஏனாதிப் பாடியம் என்றற்றா,
நோய்நாம் தணிக்கும் மருந்தெனப் பாராட்ட

ஒவாது, அடுத்து அடுத்து, அத்தா அத்தா என்பான் மாண
வேய் மென்தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்றுஇவன், 20
வாய் உள்ளிற் போகான் அரோ

உள்ளி, உழையே ஒருங்கு படைவிடக்
கள்ளர் படர்தந்தது போலத், தாம்எம்மை
எள்ளுமார் வந்தாரே ஈங்கு

ஏதப்பாடு எண்ணிப் புரிசைவியல் உள்ளோர், 25
கள்வரைக் காணாது கண்டேம் என்பார் போலச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/106&oldid=1129669" இலிருந்து மீள்விக்கப்பட்டது