பக்கம்:மருதநில மங்கை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதநில மங்கை105


சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவல்; நின்
ஆணை கடக்கிற்பார் யார்?

அதிர்வில் படிறுஎருக்கி வந்துஎன் மகன்மேல்
முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி 30
உதிர்துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப
எதிர்வளி நின்றாய் நீசெல்.

இனி, எல்லா! யாம் தீதிலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி யாதொன்றும் எம்கண் மறுத்தா இல்லாயின்,
மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் 35
தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும்
ஆபோல் படர்தக நாம்.”

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், தன் மகனைத் தழுவி நின்ற தலைவி அறியாவாறு சென்று நின்று, அவளோடு உறழ்ந்து கூறி ஊடல் தீர்ந்தது இது.

1. அவ்வாய்–அழகிய வாய்; 2. மெய்பெறா–பொருள் செறியாத; நனைத்தர–நனைய; 3. பொலம் பிறை–பொன்னால் பிறைபோல் பண்ணிய அணி: உருள்கலன்–சுட்டி; 5. எஞ்சாது–முழுமையும்; உடைகழல்–உடுத்த உடை கழன்று போகும்; 6. அரிபொலி–உள்ளே இட்ட பரலால் அழகுபெற்ற; தட்ப தடுக்க; 7. அலர்ந்த–பருத்த; 9. பெருவிறல்–முருகன்; 11. கைதூவா–கைஓயாத; 12. ஞாயர்–செவிலித்தாயர்; பயிற்ற–கற்றுத்தர; 17, வாய் ஓடி– வாய்மறந்து; ஏனாதிப்பாடி – ஏனாதி என்பான் பெயரால் எழுந்த ஒரு பரத்தையர் சேரி; 21. வாய்உள்ளல்– வாயினின்றும்; 22. உழையே–கோட்டையின் உள்ளே; 24. எள்ளுமார்–நகைத்தற் பொருட்டு; 28. கடக்கிற்பவர்–மீறுபவர்; 29. படிறு–வஞ்சனை; எருக்கி–வருத்தி; 30. முச்சி–உச்சியினின்றும்; 32. எதிர்வளி – எதிர்க்காற்று; 33. கைந்நீவி–கைகடந்து; 35. எந்தை–என்தந்தை; 36. தாவா–குறையாத; யாத்துழி–கட்டியுள்ள இடத்திற்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/107&oldid=1129866" இலிருந்து மீள்விக்கப்பட்டது