பக்கம்:மருதநில மங்கை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17


யரேம் நினக்கு யாம்

ணவன் பரத்தை வீடு சென்று வாழ்ந்தான். பெற்ற மகனோடு பெருமனைக் கிழத்தியாய் வாழ்ந்தாள் மனைவி. ஒருநாள் மாலை, மகனுக்கு அழகிய ஆடை உடுத்து, அணி பல பூட்டி, ஏவல் மகள் ஒருத்தியை அழைத்து, “ஏடி! இவனை எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபட்டு வருக!” எனப் பணித்து அனுப்பினாள். அவளும், அவனோடே சென்று, கோயிலை வலம் வந்து வணங்கி வெளியே வந்தாள். வந்த அவளையும் அவள் கையில் தவழும் அம்மகனையும் கண்டாள் ஓர் அழகி. அவள் ஒரு பரத்தை. அம்மகனைப் பெற்ற தந்தை முதன் முதலாகக் காதலித்துக் கைப்பிடித்த பரத்தை. மிகவும் இளமைப்பருவம். தக்க இன்ன, தகாதன இன்ன என்று எண்ணிப் பார்க்கும் அறிவு வாய்க்காத அத்துணை இளம் பருவம். செல்லக் கூடிய இடம் இது, செல்லலாகா இடம் இது எனப் பாராது, வேண்டிய இடமெங்கும் திரிந்து விளையாடும் பருவம். அவள், தன் போலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/108&oldid=1129744" இலிருந்து மீள்விக்கப்பட்டது