பக்கம்:மருதநில மங்கை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134புலவர் கா. கோவிந்தன்


வரிசைப் பெரும்பாட்டொ டெல்லாம் பருகீத்தை; 35
தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்.”

தலைவி, தன் மகனுக்குப் பாலுட்டுகின்ற வழிப், பரத்தையர் வீடு சென்ற கணவன் வந்து சிறைபுறத் தானாகத், தன்னுள்ளே புலந்து கூறியது.

1. ஈரமை–இரண்டாய் அமைந்த; சுற்று பாதசரம்; 2. புறம் தந்த–புறத்தே நிறம் விளங்கப் பண்ணிய; 3. காசு–மணிகள்; பொலங்காழ்–பொன்மாலை; 4. மை இல்–அழுக்கு இல்லாத; துகிர்–பவளம்; 5. தை இய–உடுத்த; ஐதுகழல்–நழுவிநழுவி விழுகின்ற; 6. அலவன்–நண்டு; 7. கோல்–அறுப்புத் தொழில்; அவிர்தொடி–ஒளி வீசும் தொடி; 8. எறியாவாள் எற்றா மழு–சிவனுக்குரிய; படைக்கலங்களாயவாளும், மழுவும் போலப் பண்ணிய அணிகள்; 10. பொய்புல மூதாய்– மழை பெய்த நிலத்தில் மொய்க்கும் இந்திர கோபம் அல்லது தம்பளப் பூச்சி எனப்படும் பட்டுப்பூச்சி; அதன் மேற்புறம் அழகிய செந்நிறம் வாய்ந்தது. 13. முக்காழ்–மூன்றுவடம், 16. சுரும்பாற்றுப்படுத்த மாலை–வண்டுகள் மொய்க்காத மணிமாலை; 19. தூங்கும்–அசையும்; 20. வந்தீ–வருக; 21, உண்ணிய–உண்ணற் பொருட்டு; உண்ணிய வந்தீ; 22. பலவல் பல தொழில்வல்ல; 23. துடக்கி வலிதிற் கைப்பற்றி; 26. மாயச்சூள்–பொய்ச்சூள்; தேறி–நம்பி; 27. பனிபரப்பு–நீர் நிறைய; கண்படா– உறக்கம் இல்லாத; 28. ஞாயர்–தாய்மார்கள்; 29. கதுமென–திடுமென; 30. தம்பாலவர்–தம்முடைய நண்பர்; 32. குடியுண்டீத்தை–குடிப்பாயாக; 34. செருக்குறித்தாரை சினந்து போர் கருதி வந்தாரை; உவகைக் கூத்தாட்டும்–மகிழ்ச்சி செய்யும்; 35. வரிசைப் பெரும்பாட்டு – பெரிதும் பாராட்டுதல்; பருகீத்தை–குடிப்பாயாக; 36. தண்டு வென்–மனம் அமைதி கொள்வேன்; ஞாயர் மாட்டைப் பால்–தாயர்க்கு உரிய பால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/136&oldid=1130005" இலிருந்து மீள்விக்கப்பட்டது