பக்கம்:மருதநில மங்கை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21


அன்பிலி பெற்ற மகன்!

றிவன அறிந்த அறிவுடையவள் அவள். தவறு செய்பவன் தன் கணவனே ஆயினும், அதை அவனறியக் காட்டித் திருத்தும் அஞ்சாமையும் உடையவள் அவள். அத்தகையள் என்பதை அறியாத அவள் கணவன், அவளையும் மகனையும் மறந்து பரத்தை வீடு சென்று வாழத் தொடங்கினான். அவனோர் அரசிளங் குமரன். பகை கொண்டு பாய்ந்து வரும் பகைவர் எத்துணை ஆற்றலுடையரேனும், அவரை அறவே அழித்தொழிக்க வல்ல ஆண்மை; தன் குடைக்கீழ் வாழ்வாரின் குறைகளையும், முறையீடுகளையும் உள்ளவாறு உணர்ந்து அவற்றிற்கேற்ற அறம் வழங்கும் செங்கோற் சிறப்பு: தன்னைப் பாடி வரும் பாணர் பெறுநர் முதலாம் இரவலர்க்குக் குறைவறக் கொடுக்கும் கொடை முதலாம் அரிய பண்புகள் பலவும் அவன்பால் பொருந்தியிருந்தன வேனும், அவன் மனைவி, அவன்பால் பரத்தையர் ஒழுக்கம் எனும் குறை கண்டு மனம் பொறாளாயினள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/137&oldid=1130006" இலிருந்து மீள்விக்கப்பட்டது