பக்கம்:மருதநில மங்கை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136புலவர் கா. கோவிந்தன்


அவன்பால் காணலாம் அவ்வரும் பெரும் பண்புகள் கண்டு பாராட்டி மகிழும் அவள் உள்ளம், அவன் ஒழுக்கக் கேடறிந்து உறுதுயர் கொண்டது. அதை அவனறியக் கூறிக் கண்டிக்கும் காலத்தை எதிர்நோக்கிக் காத்துக் கிடந்தாள்.

அவளுக்கு ஒரு மகன். அழகின் திருவுருவாம் அவனைத் தன் அரச நிலைக்கேற்ற ஆடை அணிகள் அழகு செய்து மகிழ்ந்தாள். அவனும், தான் பிறந்த அரச குடிக்கு ஏற்ற ஆடற் பொருள்களை வைத்து ஆடி மகிழ்ந்தான். பெற்ற மகனைச் சான்றோனாக்கும் கடமை மேற்கொண்ட அவன் தந்தை, அதைச் செய்ய மறந்து பரத்தை வீட்டில் வாழ்வதால், அம்மகனை ஈன்று புறம் தந்ததோடு, சான்றோனாக்கும் பணியையும் அவளே மேற்கொண்டாள். இவ்வாறு, மகனை அழகுசெய்து, ஆடற் பொருள்களோடு புறத்தே அனுப்பி, அவனை ஆடவிடுத்து, அவ்வழகிய காட்சியைக் கண்டும், ஆடி வீடு திரும்பும் அவனுக்கு, அரிய பல அறிவுரைகளை உரைத்தும், வாழ்ந்திருந்தாள் அவள்.

ஒருநாள் மகன் தெருவில் ஆடிக் கொண்டிருந்தான். பவழப் பலகைமீது பொன்னால் செய்து அமைத்த அழகிய யானையை வைத்து ஆடிக் கொண்டிருந்தான். வேறோர் யானையைத் தன் கோடுகளால் குத்திக் கொல்வது போன்ற தோற்றம் அமையவிருந்தது அந்த யானை. வளர்ந்து பேரரசனாய் வாழும் தான் பிற்காலத்தே, காவல் மிகுந்த பெரிய கோட்டைகளைத் தன் வேழப் படையால் பாழ்படுத்தப் போகும் அவன் இன்று, தன்னோடு உடன் ஆடும் இளைய மகளிர் ஆக்கிய மணல் வீடு அழியுமாறு, தன் யானையை ஈர்த்து ஆடிக் கொண்டிருந்தான். தேரையின் வாய் போலும் வடிவுடையவாய்ப் பண்ணிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/138&oldid=1130007" இலிருந்து மீள்விக்கப்பட்டது