பக்கம்:மருதநில மங்கை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146புலவர் கா. கோவிந்தன்


“ஒரூஉநீ; எம்கூந்தல் கொள்ளல்; யாம் நின்னை வெரூஉதும் காணும் கடை தெரிஇழாய்! செய்தவறு இல்வழி யாங்குச் சினவுவாய், மெய் பிரிந்து அன்னவர் மாட்டு? ஏடா! நினக்குத் தவறுண்டோ ? நீ வீடு பெற்றாய்; 5 இமைப்பின் இதழ் மறைபாங்கே கெடுதி; நிலைப்பால் அறியினும் நின்நொந்து நின்னைப் புலப்பார் உடையர் தவறு. அணைத்தோளாய்! தீயாரைப்போலத் திறன் இன்று உடற்றுதி, காயும் தவறிலேன் யான், 10 மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது நாண் இலனாயின் நலிதந்து அவன்வயின் ஊடுதல் என்னோ இனி? இனி, யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் தகையது காண்டைப்பாய்; நெஞ்சே! பனிஆனாப் 15 பாடில்கண் பாயல் கொள்.”

பரத்தையர் உறவு கொண்டு மீண்ட தலைவனோடு ஊடிய தலைவி, தோழி வாயிலாக ஊடல் தீர்வுழிக் கூறியது இது.

1. ஒரூஉ–நீங்கிநில்; கொள்ளல்–தொடாதே 2. வெரூஉதும்–வெறுக்கிறோம்; காணும்கடை–காணும்பொழுது; 4. அன்னவர் மாட்டு மெய் பிரிந்து செய்தவறு இவ்வழி என மாற்றுக. அன்னவர்–அப்பரத்தையர்; 5. வீடு–விடுதலை; 6. கெடுதி–மறைந்து விடுகிறாய்; 7. நிலைப்பால்–உன் நிலையின் இயல்புகளை; 9. இன்று–இல்லையாகவும்; உடற்றுதி. – வருத்துகிறாய்; 12. நலிதந்து–வருத்தி; 14. யாதும்–சிறிதும்; மீக்கூற்றம்– தம்மை மேம்படுத்திக் கூறும் புகழ் உரை; யாம் இலம்–நமக்கு இல்லை ; 15. காண்டைப்பாய்–காண்பாயாக; பனி ஆனா–கண்ணீர் வற்றாத; 16. பாடுஇல்–உறக்கம் இல்லாத.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/148&oldid=1130019" இலிருந்து மீள்விக்கப்பட்டது