பக்கம்:மருதநில மங்கை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23


தேற்றேம் யாம்

தானும், தன் கணவனும் பிரிவறியாப் பேரின்ப வாழ்வினராதல் வேண்டும் என விரும்பும் இன்ப வேட்கை உடையாள் ஒருத்தி, அக் கணவன் பழியிலனாதலும் வேண்டும் என்ற உயர்ந்த உள்ளமும் கொண்டிருந்தாள். தவறு செய்த ஒருவர், தாம் செய்த தவறினை மறைக்கப் பொய்ச் சூள் உரைப்பராயின், அவரைத் தெய்வம் ஒறுக்கும் என எண்ணி அஞ்சுவள். ஆனால், அவள்பால் பேரன்பு கொண்ட அவள் கணவனோ, குற்றம் புரியவும், குற்றத்தை அறியின் மனைவி செற்றம் கொள்வள் என அஞ்சுவதால், அதை அவள் அறியாவாறு மறைக்கப் பொய்ச்சூள் உரைக்கவும் அஞ்சாது வாழ்ந்தான். மனைவி இளமையும், அழகும், அன்பும் உடையளாகவும், ஒருகால், ஊரில் உள்ள பரத்தை யொருத்திபால், அவன் காதல் கொண்டான். ஒரு நாள், மனைவி அறியாவாறு சென்று, தன் மனம் விரும்பிய அப்பரத்தையின் மனை புகுந்து மகிழ்ந்தான். அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/149&oldid=1130020" இலிருந்து மீள்விக்கப்பட்டது