பக்கம்:மருதநில மங்கை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164புலவர் கா. கோவிந்தன்


மாறாள் சினைஇ, அவள் ஆங்கே நின்மார்பின் 15 நாறிணர்ப் பைந்தார் பரிந்தது அமையுமோ? தேறிநீ, தீயேன் அலேன், என்று மற்றுஅவள் சீறடி தோயா இறுத்தது அமையுமோ? கூறு; இனிக் காயேமோ யாம்?

தேறின், பிறவும் தவறிலேன் யான், 20 அல்கல், கனவுகொல் நீகண்டது?

‘கணைபெயல், தண்துளி வீசும்பொழுதில் குறிவந்தாள் கண்டகனவு’ எனக், காணாது, மாறுற்றுப் பண்டைய அல்ல நின்பொய்ச்சூள் நினக்கு, எல்லா! நின்றாய்; நின்புக்கில் பல. 25

மென்தோளாய்? நல்குநின் நல்எழில்; உண்டு, ஏடா! குறையுற்று நீஎம் உரையல்; நின்தீமை பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ? யாழ நிறையாற்றா நெஞ்சுடையேம்.

தலைவன் பரத்தையர் ஒழுக்கம் கண்டு ஊடிய தலைவி, அவன் ஆற்றாமை கண்டு ஊடல் தீர்ந்தது.

1. மாயம்–ஈண்டு பரத்தையர் ஒழுக்கம்; 2. மண்டாத–விரும்பாதன; தொடீஇய–தொட; 5. வடு–உரு; கரந்து–மறைத்து; 6. பாடுபெயல்–பெரு மழை; பானாள் இரவு–இரவின் நடுயாமம்; 7. பொலி–அழகு செய்யும்; 9. நுசுப்பு–இடை; 10. அல்கல்–இரவு; 11. ஞெகிழம்–சிலம்பு; சிலம்ப–ஒலிக்க; சிவந்து–கோபித்து; 12. போரார் – பொருந்திய; 15. மாறாள்–தன் நிலையில் மாறுபடாது; 16. தார்–மலை; பரிந்தது–அறுத்தது; 17. தேறி–தெளிவாய்; 18. சீறடி–சிறிய அடி; தோயா–தொட்டு; பணிந்து; இறுத்தது–தங்கியது; 22. கணை பெயல்–பெருமழை; 23, காணாது–உன் பிழையைப் பாராது; காணாது மாறுற்று நின்றாய்; சூள் நினக்குப் பண்டைய அல்ல என மாற்றுக, 24. பண்டைய அல்ல–பண்டைய சூள்போலப் பயன்தாரா: 25 புக்கில்–நுழையும் வீடு. 26. உண்டு நுகர்வேன்; 28. யாழ–அசை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/166&oldid=1130072" இலிருந்து மீள்விக்கப்பட்டது