பக்கம்:மருதநில மங்கை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
26


நின்வயின் நெகிழும் என் நெஞ்சு

ளகிய நெஞ்சுடையாள் அவள். கணவன் சிறிது அதிகமாக அன்பு காட்டினால், அவன் செய்த தவறுகளை மறந்து மன்னிக்கும் மாண்பு மிக்க மனம் உடையாள். அவள் அத்தகையாள் என்பதை அறிந்தமையால், அவள் கணவன், பரத்தையர் உறவுபோலும் தவறுகளைத் துணிந்து செய்து வந்தான்.

ஒரு நாள், அவன் பரத்தையர் சேரி சென்று. அங்கு பலரோடு தொடர்புகொண்டு, மகிழ்ந்திருந்துவிட்டுத், தன் மனை புகுந்தான். வந்த கணவன் தோற்றத்தைக் கண்டாள் அவன் மனைவி. அல்லி, முல்லை, அனிச்சம், நீலம் முதலாம் மலர்களை நறாம் பூவோடு கலந்து கட்டிய கண்ணியும், கழுத்து மாலையும், அப் பரத்தையரோடு புணர்ந்தமையாலும், அப் பரத்தையர் அவனோடு புலந்து, பற்றி அலைக்கழித்தமையாலும், வண்ணம் இழந்து வாடித் தோன்றின. அத் தோற்றம், அவன் பரத்தையர் மனையினின்றும் வருகிறான் என்பதை உணர்த்திற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/167&oldid=1130073" இலிருந்து மீள்விக்கப்பட்டது