பக்கம்:மருதநில மங்கை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166புலவர் கா. கோவிந்தன்


அதனால் உள்ளம் வருந்திய அவள், அவன் அண்மையில் வந்ததும், “என் தலைவன் அழகு, நேற்றினும், இன்று நனி மிக நன்று!” எனக் கூறி எள்ளி நகைத்து, வெறுத்து, வேறிடம் சென்றாள்.

வெறுத்துச் செல்லும் மனைவியைக் கண்டான். அணைபோல் சேர்ந்தார்க்கு மென்மையும், இனிமையும் தரும் அவள் தோளழகைக் கண்டு உள்ளுக்குள்ளே மகிழ்ந்தான். பின்னர் அவளைத் தொடர்ந்து பின் சென்று, “பெண்ணே புறத்தே செல்லும் எனக்குப் பரத்தை வீடல்லது வேறு போக்கிடம் உண்டோ என்ற ஐயம், உன் உள்ளத்தில் எவ்வாறோ இடம் பெற்று விட்டது. அதனால், நான் செய்யாத குற்றத்தைச் செய்ததாகக் கூறி என்னைச் சினக்கின்றாய். அது வேண்டாம். ‘நான் பிழையேதும் புரிந்திலேன்!’ எனத் தெய்வத்தின் முன் நின்று ஆணையிட்டு உரைக்கவும் நான் அஞ்சேன். நீ கூறும் தவறு என்பால் இல்லை. இதை நீ நின் கருத்தால் உணர்தல் வேண்டும்!” என அவள் உள்ளம் உருகும் வகையில் விளங்க எடுத்துரைத்தான்.

கணவன் கூறியன கேட்டாள். அவன் ஒழுக்கம் கெட்டவன் என்பதை அவள் ஐயமற அறிந்திருந்தாளாதலின், அன்று, ‘சூளுரைக்கவும் அஞ்சேன் !’ என அவன் உரைத்ததை ஒப்புக் கொள்ள மறுத்தது அவள் உள்ளம். அதனால் பலப்பல கூறிப் பின்தொடர்ந்து வரும் அவனை நோக்கி, “ஏடா! ஈங்கிருந்து சென்றநீ, ஆங்குச் செய்த செயல் யாது என்பதை அறிவேன். உன் சூள் பொய்ச் சூள் என்பதையும் அறிவேன். பரத்தையர் சேரியுள் ஒருத்தி உன்னைப் பெற்றுத் தழுவ, அக்காலை அவள் தொடி அழுத்திப் பண்ணிய தழும்பையும், நீ செய்த குறியிடத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/168&oldid=1130126" இலிருந்து மீள்விக்கப்பட்டது