பக்கம்:மருதநில மங்கை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168புலவர் கா. கோவிந்தன்


கணவன் உறுதிப்பாட்டைக் கண்டாள் மனைவி, அதற்கு மேலும் அவனை வெறுக்க அஞ்சிற்று அவள் உள்ளம். ஊடல் தணிந்தது. ஏற்றுக்கொள்ள இசைந்தாள். கணவனை நோக்கினாள். “உனக்கு நான் எளியளாய், உன்னோடு புணர்தற்கு இசைந்தால் அவ்வெளிமையால் என்னை விடுத்துப் பரத்தையர்பால் செல்லும் நீ, நான் உன் பழிகண்டு, உன்னை வெறுத்துப் புலக்கத் தொடங்கியவுடனே, பெரிதும் வருந்துகின்றாய். பரத்தைய ரொழுக்கம் என்ற இப்பழியே யன்றி, வேறுபல பெரும் பழிகளைப் புரியினும், உன்னை வெறுக்காது விரும்பும் என் உள்ளம், இன்று நான் ஊடிநிற்பதால், வருந்தும் உன் நிலை கண்டு மிகவும் கலங்கி விட்டது. என் உள்ளத்தின் உறுதிப்பாடற்ற இந்நிலையை அறிந்துகொள்ள மாட்டாது. நீ நான் விரும்புமாறு காரணம் பல காட்டி, உன் பிழையின்மையை நிலைநாட்ட நீ ஏன் பெரிதும் முயல்கின்றனை? உன்செயல் வேண்டாத வீண் செயலாம். என் நெஞ்சம், உன்னை ஏற்றுக் கொண்ட பின்னர், என்னைத் தெளிவிக்க நீ மேற்கொள்ளும் முயற்சிகள் தேவையற்றன.!” எனக் கூறி, ஊடல் தவிர்ந்து உவந்தாள்.

“அரிநீர் அவிழ்நீலம், அல்லி, அனிச்சம்,
புரிநெகிழ்முல்லை, நறவோடு அமைந்த
தெரிமலர்க் கண்ணியும், தாரும், நயந்தார்
பொருமுரண் சீறச் சிதைந்து, நெருநையின்,
இன்று நன்று என்னை அணி. 5

அணை மென்தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன்?
ஐயத்தால் என்னைக் கதியாதி, தீதின்மை
தெய்வத்தால், கண்டி, தெளிக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/170&oldid=1130130" இலிருந்து மீள்விக்கப்பட்டது